| இரு நாட்களில் 23 பேருக்கு தொற்று; ஒருவர் இறப்பு Dinamalar
இரு நாட்களில் 23 பேருக்கு தொற்று; ஒருவர் இறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2020
22:26

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், இரு நாட்களில், 23 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது; தொற்று பாதித்த ஒருவர் இறந்தார்.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ராஜேஸ்வரி நகரில், 37 வயது ஆண்; செல்லப்பா வீதியில், 36 வயது ஆண்; முல்லை நகரில், 54 வயதான ஆண்; முருகப்பா லே - அவுட்டை சேர்ந்த, 39 வயது ஆண், அவரது, நான்கு வயது மகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.ஆ. சங்கம்பாளையம் சூர்யா நகரில், 52 வயது ஆண்; ஜமீன்முத்துாரில், 23 வயதான பெண்; சின்னாம்பாளையம் மின்நகரில், 8 வயதான சிறுவன்; ஆனைமலை ஒன்றியம் ஜல்லிபட்டியில், 58 வயதான ஆண்; பெரியபோது கிராமத்தில், 70 வயதான ஆண் ஆகியோருக்கு நேற்று முன்தினம் தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், சிங்காநல்லுாரில், 42 வயதான ஆண், தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார்.இந்நிலையில், பொள்ளாச்சி ராஜாஜி வீதியை சேர்ந்த, 50 வயது ஆண், 40 வயது பெண், கே.ஆர்.ஜி.பி., நகரை சேர்ந்த, 73 வயது முதியவர், அன்சாரி வீதியில், 62 வயது முதியவர், அண்ணாநகரை சேர்ந்த, 19 வயது இளைஞர், ஆச்சிபட்டி, கோட்டூரில் தலா ஒருவர் என, நேற்று, 13 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.தொற்று பாதித்தவர்கள் கோவை இ.எஸ்.ஐ., பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தொற்று பாதித்தவர்களுடன் வசித்த மற்றும் அவர்களை சந்தித்த, 48 பேரிடம் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X