செய்தி சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2020
23:10

பெண் துாக்கிட்டு தற்கொலை



திருவேற்காடு: திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம், ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர், ராஜ்குமார்; கார் ஓட்டுனர். இவரது மனைவி வசந்தி, 38. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். நேற்று காலை, வசந்தி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவேற்காடு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்னையால் விரக்தியடைந்து, தற்கொலை செய்தது தெரியவந்தது.



முதியவரிடம் செயின் பறிப்பு



திருமுல்லைவாயல், ஜோதி நகரைச் சேர்ந்தவர்,வாசுதேவன், 66. இவர், நேற்று முன்தினம் மதியம், வீட்டு நுழைவுவாயிலில் மாவிலை தோரணம் கட்ட, அண்ணனுார் ரயில் நிலையம் அருகே, மாவிலை பறிக்க சென்றார். அப்போது, டூ - வீலரில் வந்த மர்ம நபர், அவரது ஒன்றரை சவரன் நகையை பறித்து தப்பினார். இது குறித்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.



போதை மாத்திரை விற்றவர் கைது



ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மூன்று பேருக்கு, இருதினங்களுக்கு முன், போதை மாத்திரையை, ஊசி மருந்துபோல் பயன்படுத்தியதால், உடல் உபாதை ஏற்பட்டது. மூன்று பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆதம்பாக்கம் போலீசார் விசாரணையில், ஆதம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், 22, போதை மாத்திரை விற்பனை செய்வது தெரிய வந்தது. நேற்று,விக்னேஷை கைது செய்த போலீசார், 27 அட்டை போதை மாத்திரையை பறிமுதல் செய்தனர்.



மொபைல் போன் பறிப்பு



மயிலாப்பூர்: ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்தவர், மெல்வின், 18. இவர், நேற்று காலை மயிலாப்பூர், கச்சேரி சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது டூ - வீலரில் வந்த, மர்மநபர்கள் இருவர், அவரது மொபைல் போனை பறித்து சென்றனர். இது குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு



மடிப்பாக்கம்: மூவரசம்பட்டு, பாரதியார் தெருவை சேர்ந்தவர், மூர்த்தி, 60. நேற்று காலை, குடும்பத்துடன் வெளியே சென்று, வீடு திரும்பினார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த, 5 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், மொபைல் போன் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றனர்.இது குறித்து, மடிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.



மகளை இழந்த தந்தை தற்கொலை



பட்டாபிராம் :ஆவடி அருகே பட்டாபிராம், சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி, 46. இவரது மகள் பவித்ரா, 22. இவர், ஜூலையில் தற்கொலை செய்து கொண்டார். மகளை இழந்து வாடிய ரவி, மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாதபோது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.



நகை திருடிய பெயின்டர் கைது



வேளச்சேரி: வேளச்சேரி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர், விஜயகுமார், 45. கடந்த, 11ம் தேதி, இவர் வீடு புகுந்த நபர், 4 சவரன் நகை, மொபைல் போன் ஆகியவற்றை திருடினார். வேளச்சேரி போலீசார் விசாரணையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சசிகுமார், 42, என தெரிந்தது. பெயின்டராக பணி புரியும் இவரை, நேற்று கைது செய்த போலீசார், திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.



வாலிபருக்கு 'போக்சோ'



பட்டாளத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி, 14ம் தேதி, கடைக்கு செல்வதாக கூறி, வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின் வீடு திரும்பவில்லை. சிறுமியின் பெற்றோர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்தனர். விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த, அலெக்ஸ், 20, என்பவர், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, செங்குன்றத்தில் உள்ள, தன் உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றது தெரியவந்தது. போலீசார் அலெக்சை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X