தமிழக எல்லைக்கு வந்தடைந்தது கிருஷ்ணா நீர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2020
23:11

ஊத்துக்கோட்டை : சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், மூன்றாவது நாளான நேற்றிரவு, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, 'ஜீரோபாயின்ட்'டை வந்தடைந்தது.தமிழக - ஆந்திர அரசுகள் இடையே, தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஜூலை -- அக்டோபரில், 8 டி.எம்.சி.,யும்; ஜனவரி -- ஏப்ரலில், 4 டி.எம்.சி., என, இரண்டு தவணைகளில், ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு தர வேண்டும்.ஒப்பந்தம் போடப்பட்டு, 38 ஆண்டுகளில் ஒருமுறை கூட, முழு அளவு நீர் வழங்கப்படவில்லை. இந்தாண்டு ஜூலையில், கண்டலேறு அணையில், நீர் இருப்பு குறைவை காரணம் காட்டி திறக்கவில்லை.இந்நிலையில், சென்னையின் நீராதாரங்களான, பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கத்தில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதையடுத்து, தமிழக அரசு, ஆந்திர அரசிடம் பேச்சு நடத்தியது.இதன் பலனாக, இம்மாதம், 18ம் தேதி, காலை, ௯:௦௦ மணிக்கு, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து, நீர் திறக்கப்பட்டது.துவக்கத்தில், வினாடிக்கு, 500 கன அடி வீதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், பின் படிப்படியாக அதிகரித்து, 1,500 அடியாக உயர்த்தப்பட்டது.ஆந்திர மாநில சாய்கங்கை கால்வாய் பகுதிகளில், மழை பெய்து வருவதால், சாய்கங்கை கால்வாய் வழியே, 152 கி.மீ., கடந்து, கிருஷ்ணா நீர், தமிழகத்தை நோக்கி வந்தது.நான்கு நாட்களில், தமிழகத்தை அடையும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றாவது நாளான நேற்றிரவு, 8:00 மணிக்கு, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, 'ஜீரோபாயின்ட்'டை வந்தடைந்தது.தமிழக, ஆந்திர அதிகாரிகள் மலர் துாவி கிருஷ்ணா நீரை வரவேற்றனர். இங்கிருந்து, 25 கி.மீ.,யில் உள்ள, பூண்டி நீர்த்தேக்கத்தை, இன்று இரவு சென்றடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
21-செப்-202014:32:52 IST Report Abuse
R chandar Government should increase the diesalination of plant capacity and see to it water supply through pipeline to entire area through pressure instead of lorry services
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-செப்-202009:57:27 IST Report Abuse
Bhaskaran ஒருவர் முதல்வராக இருந்தபோது கிருஷ்ணா தண்ணீர் வராமலேயே வந்ததாக விழா எடுத்தார் .செய்தியாளர் கேட்டதற்கு கிருஷ்ணநீரும் மழைநீர்தான் என்று சமத் காராம் ஆகா விடையளித்தார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X