தாலுகா தேர்தல் பிரிவு ஊழியர்கள்; பணி நிரந்தரம் செய்ய எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2020
23:14

தாலுகா அலுவலகங்களில், தேர்தல் பிரிவில், 15 ஆண்டுகளாக பணிபுரியும், இளநிலை உதவியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.



வருவாய் துறையில், தாலுகா அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவுக்கு, 2005ல், தொகுப்பூதியத்தில், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம், பதிவு மூப்பு அடிப்படையில், ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.அந்த வகையில், தமிழகம் முழுதும், 52 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருவர் அடக்கம். அவர்கள், தற்காலிக இளநிலை உதவியாளர்கள் என, அழைக்கப்படுகின்றனர்.



இவர்களுக்கு மாதந்தோறும், 14 ஆயிரத்து, 640 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த, 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர்களை, இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. அதேபோல், பதவி மற்றும் ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை.இதனால், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, இளநிலை உதவியாளர்கள், பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம், பலமுறை மனு கொடுத்துள்ளனர்.மார்ச்சில் முதல்வர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். அப்படியிருந்தும், அவர்களின் கோரிக்கை, இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.



முதல்வர் இ.பி.எஸ்., தேர்தல் பிரிவு இளநிலை உதவியாளர்களின் நலன் மற்றும் வயதை கருத்தில் வைத்து, அவர்களை பணி நிரந்தரம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.




- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-செப்-202009:52:36 IST Report Abuse
Bhaskaran பதினைந்து ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக வைத்திருப்பது அரசுக்கு இழிவாக படவில்லையா உடனடியாக நிரந்தரம் செய்யுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X