கிராமத்தில் சாலை மோசம் :தோடர் பழங்குடிகள் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2020
23:17

கோத்தகிரி:கோத்தகிரி கோடுதேனி மந்து கிராம சாலையை சீரமைக்காததால், பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கோடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட, கோடுதேனி மந்து பகுதியில், தோடரின பழங்குடி மக்கள், 12 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இங்கு வனப்பகுதிக்குள், கிராமத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க, வனத்துறை தடையில்லா சான்று வழங்கியுள்ளது.கடந்த, 50 ஆண்டுகளாக சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பள்ளி மாணவர்கள், மருத்துவ சிகிச்சை பெறுவோர் மற்றும் கோடநாடு காட்சிமுனையில், 'கேன்டீன்' நடத்திவரும் மகளிர் குழுவினர் சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றனர். மழைகாலத்தில் மிகவும் அவதிப்படுகின்றனர்.இரவில், வன விலங்குகளின் நடமாட்டத்திற்கு இடையே, பாறை இடுக்குகளில் நடந்து செல்பவர்களுக்கு, பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X