புதிய கட்டடங்களுக்கு மின் இணைப்பு சிக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2020
23:39

திருப்பூர்:புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் மின் வாரியம் புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.திருப்பூர் நகரம் மற்றும் ஊரகப் பகுதியில் புதிதாக கட்டியுள்ள கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு கட்டுமானப் பணி நிறைவு பெற்றது என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.நகரமைப்பு துறை அல்லது மாநகராட்சியில் கட்டுமானப் பணி நிறைவு பெற்றதாக சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்ற, இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக, திருப்பூரில், 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மின் இணைப்பு பெறாமல் காத்திருக்கின்றன. மாநகராட்சி தரப்பில் இது போன்ற சான்றிதழ் எதுவும் வழங்குவதில்லை.அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், 'மின் வாரியத்தின் இந்த உத்தரவு திரும்ப பெற வேண் டும். இந்த உத்தரவால் மின் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு இரண்டுக்கும் இடையே மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.மாநகராட்சி தரப்பில் கூறுகையில், 'கட்டுமானப் பணி நிறைவு பெற்றால் ஆய்வு செய்து, அதற்கு சொத்து வரி விதிக்கப்படும். இது தவிர பணி நிறைவு சான்றிதழ் வழங்க, மாநகராட்சி நிர்வாகத்துக்கு எந்த உத்தரவும் வரவில்லை' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X