செய்திகள் சில வரிகளில்...: திண்டுக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
02:00

கடைக்கு அபராதம்



வடமதுரை: வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துகுமாரசாமி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பொது இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது, முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத, ஒரு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.



அடையாள அட்டை



சின்னாளபட்டி: தி.மு.க.,வின் இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. ஆத்துார் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பேசியது: எல்லோரும் நம்முடன் திட்டத்தில் உறுப்பினர்களுக்கு இணையவழி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டத்திற்கு தி.மு.க., ஆட்சியில் முடிவு ஏற்படும், என்றார். புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்.



வீடுகளுக்கு குடிநீர்



குஜிலியம்பாறை: மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 17 ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. பி.டி.ஓ., காமராஜ் கூறியது: இத்திட்டத்தில் வீட்டிற்கு தலா ரூ.3000 வைப்பு தொகை வசூல் செய்து, குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளன. ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களின் சிரமத்தை போக்க மாதம் ரூ.500 வீதம், 6 மாதம் வசூலிக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.



தாலுகாவில் முகாம்



ஆத்துார்: இன்று (செப்.21) முதல் தாலுகா அலுவலகங்களில் திங்கள் கிழமை தோறும் குறைதீர் முகாம் நடக்க உள்ளது. இதற்கென, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான ஆயத்த பணிகள், வருவாய்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள், மனுதாரர்களால் அசம்பாவிதங்களை தவிர்க்க, போலீஸ், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



'கொடை'யில் கூட்டம்



கொடைக்கானல்: கடந்த வாரம் முதல் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் முறையில் அனுமதிக்கப்பட்டனர். ஊரடங்கில் முடங்கிய பொதுமக்கள் இன்ப சுற்றுலாவிற்காக குளு, குளு நகரில் முகாமிடுகின்றனர். தோட்டக்கலைத்துறை வசமுள்ள பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்தனர். இரவில் மின் விளக்கில் மிளிரும் வெள்ளி நீர்வீழ்ச்சி அழகுற காட்சியளித்தது. விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். '



லட்சுமிநரசிம்மர் பூஜை



பழநி: ராமநாதநகரில் உள்ள லட்சுமிநரசிம்மர் கோவிலில் புரட்டாசி மாதம் வளர்பிறை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X