போலீஸ் செய்திகள்...: திண்டுக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
02:01

'டீ' கடையில் 'மது':இருவர் கைது



குஜிலியம்பாறை: பஸ் ஸ்டாண்ட் அருகே டீ கடை நடத்தி வருபவர் குமரேசன் 46. இவர் கடையில் வைத்து மது விற்பதாக குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., செல்வராஜ் நடத்திய சோதனையில்,மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. குமரேசனை கைது செய்து, 54 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். இதே போல் செங்காளியூரில் டீ கடையில் வைத்து மது விற்ற சுப்பிரமணியை 54, கைது செய்து 74 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



காதலர்கள் தஞ்சம்



வடமதுரை: மடூரை சேர்ந்த பழனிக்குமார் 25, இவரது வீட்டின் அருகே வசித்த கலைச்செல்வியும் 22, காதலித்தனர். காதலை பெற்றோர் எதிர்த்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர். நேற்று இருவரும் பாதுகாப்பு கேட்டு வடமதுரை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர்.



மூதாட்டி கொலை: வாலிபர் கைது



திண்டுக்கல்: செட்டிநாயக்கன்பட்டி செல்வம் மனைவி மீனாட்சி 60. இவர் நந்தவனப்பட்டி ரோட்டில் டீ கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கடையில் உறங்கி கொண்டிருந்த மூதாட்டியை, சீலப்பாடியைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் 19, அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பிரகதீஸ்வரன் தப்பி ஓட முயன்றபோது பொதுமக்கள் பிடித்து தாடிக்கொம்பு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மது, கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.



போக்சோ வழக்கு



நிலக்கோட்டை: சாமியார்புரம் 10ம் வகுப்பு மாணவியை, காமாட்சிபுரம் சிங்கராஜா 30, கையை பிடித்து இழுத்தார். சிறுமியின் தந்தை அழகர் அளித்த புகாரின் பேரில், நிலக்கோட்டை மகளிர் போலீசார் சிங்கராஜா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.



ஒருவர் பலி



பழநி: அடிவாரம் பகுதி காளிதாஸ் 36, கடந்த செப்.16 ல் பெரியப்பா நகரில் கட்டிட வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.



மணல் கடத்தல்



நெய்க்காரப்பட்டி: சண்முகம் பாறையில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து பழநி தாலுகா போலீசாருக்கு அங்கு சென்றனர். அப்போது, மணல் அள்ளிய ஓடக்காடு பெரியகாளியப்பனை 60, கைது செய்து மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X