திருப்பூரில்4,161 பேர் குணமடைந்தனர்: அச்சம் வேண்டாம்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
02:17

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 124 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 169 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மொத்த பாதிப்பு, 6,059 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, 124 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.இதுவரை, 4,161 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர். கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 63 வயது முதியவர்; கோவை தனியார் மருத்துவமனையில் இருந்த, 48 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்தனர். பலியானவர்கள் எண்ணிக்கை, 95 ஆக உயர்ந்துள்ளது.-நமது நிருபர் குழு-

'மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ...!'இந்தப் பாடல், 'பாடும் நிலா' பாலு, மூச்சு விடாமல் பாடிய பாடல். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சையில் இருந்து, மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருக்கிறார் பாலு.இதே காலகட்டத்தில்தான், கன்னியாகுமரி எம்.பி., வசந்தகுமார் கொரோனா பாதிப்புக்குள்ளானார். மருத்துவமனையில், 18 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் தராமல் மரணம் அடைந்தார். இவரை விட ஐந்து வயது மூத்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். உடல் எடையும் அதிகம். சர்க்கரை, ரத்த அழுத்தம் என பலவிதமான பிரச்னைகளைக் கொண்டவர்.இவர்கள் இருவருக்குமே அதிநவீன சிகிச்சைகள்தான் தரப்பட்டன. எஸ்.பி.பி.,யின் உடல், சிகிச்சைக்கு ஒத்துழைத்து மீண்டெழுவதற்குக் காரணமாக இருப்பது அவருடைய பாட்டுதான். அதாவது பாடுவதற்காக இயற்கையாகவே அவர் எடுக்கும் முயற்சிகள்தான், மூச்சுப்பயிற்சியாக இருந்து அவரைக் காத்திருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு மூச்சுத்திணறலே பெரும் பிரச்னையாக உள்ளது. பயிற்சி கொடுத்ததில் பலருக்கும் அடைப்புகள் நீங்கி மூச்சுத் திணறலில் இருந்து மீண்டிருக்கின்றனர்.மூச்சுப் பயிற்சியுடன் சில கஷாயங்கள் அல்லது மருந்துகளை எடுக்கும்போது சளி உடலில் துளியும் தங்காது. யோகா, நடைப்பயிற்சி செய்வது, நமது பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தி உள்ள கஷாயங்களை உட்கொள்வது போன்றவை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.ஒரு புறத்தில் கொரோனா அச்சத்தால் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். மறுபுறத்தில் அச்சமென்பது துளியுமின்றி, முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி, நடமாடுகின்றனர். இரண்டுமே தவிர்க்க வேண்டியவை.கொரோனா அறிகுறி இருந்தால் அச்சப்பட வேண்டியதில்லை; அதற்காக அசட்டையாகவும் இருக்க வேண்டியதில்லை.பரவும் கொரோனா...தடுக்கும் வழிகள்!l முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, சானிடைசிங் அதிமுக்கியம்.l 90 கிலோவுக்கு அதிகமாக எடை உள்ளவர்கள் வெளியில் வருவதைத் தவிர்ப்பது நல்லது.l ஒரு நாள் கபசுரக்குடிநீர், ஒரு நாள் நிலவேம்புக் கஷாயம் பருகலாம்.l இஞ்சி, மஞ்சள், மிளகு சேர்த்த உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். புளியைக் குறைக்க வேண்டும்.l தண்ணீரில் நொச்சி இலை, மஞ்சள், கல் உப்பு போட்டு மண்சட்டியில் நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம்.l வீட்டை சுற்றிலும், வேப்பிலை, நொச்சி இலை கொண்டு புகை ஏற்படுத்தலாம்.l சளி, தும்மல் இருந்தால், அதிமதுரம், சித்தரத்தை, மிளகு, சீரகம் ஆகியவற்றைப் பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிடலாம்.l வெந்நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் கலந்து நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை தொண்டையில் தண்ணீரை நிறுத்தி கொப்பளிக்கலாம்.l மிளகு, சீரகம், வெந்தயம் கலந்த ரசம் அருந்தலாம்.l கஸ்துாரி மஞ்சள், கற்பூரம், புதினா மற்றும் கல் உப்பு இதை நான்கையும் சேர்த்து ஒன்றாக கலந்து, துணியில் கட்டி வைத்துக்கொண்டு அடிக்கடி முகர்ந்து பார்க்கலாம்.l துளசி, நொச்சி இலை, துாதுவளை, கண்டங்கத்தரி போன்ற மருத்துவ குணமிக்க செடிகளை வீட்டில் வளர்த்து அடிக்கடி பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X