திருப்பூரில் தறி கெட்டு ஓடிய கார்: தாய், மகன், மகள் உட்பட 4 பேர் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
02:23

பொங்கலூர்:திருப்பூர் அருகே, அதிவேக கார் மோதியதில், தாய், மகன், மகள் உட்பட நான்கு பேர் பலியாயினர்.திருப்பூர் மாவட்டம், காங்கயம், பொதிபாளையத்தை சேர்ந்த நடராஜ் மகன் மதன்குமார், 25. கோவை மாவட்டம், சூலுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று அதிகாலை, காங்கயத்தில் இருந்து உறவினருடன், திருப்பூருக்கு 'ஸ்கார்பியோ'(டி.என்., 21-பி.ஏ., 5 ) காரில் சென்றார்.


உறவினரை திருப்பூரில் விட்டுவிட்டு, இவர், காரில், காங்கயம் புறப்பட்டார்.திருப்பூர், முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ஜீவா, 43; பனியன் தொழிலாளி. இவரது கணவர் ராஜா, இவரை விட்டு பிரிந்துவிட்டார். இவர்களது மகன் மித்ரன், 17, பிளஸ் 1 வகுப்பும், மகள் மெர்சிலி, 15, பத்தாம் வகுப்பும் படித்து வந்தனர். ஜீவா, மித்ரன், மெர்சிலி ஆகிய மூவரும் காங்கயத்தில் இருந்து, திருப்பூருக்கு 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். மித்ரன், ஸ்கூட்டரை ஓட்டிவந்தார்.நேற்று காலை 6:00 மணியளவில், மதன்குமார் ஓட்டிவந்த கார், ரங்கபாளையம் அருகே, எதிரே வந்த ஸ்கூட்டர் மீது, மோதியது. பின், டி.வி.எஸ்., எக்ஸ் எல் மொபட்டில் வந்துகொண்டிருந்த, ரங்கபாளையம் செந்தில் நகரை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் லிங்கசாமி, 47, என்பவர் மீதும் மோதியது.


பின், அங்கிருந்த வேப்ப மரம் மற்றும் கற்கள் மீது மோதி, கார் நின்றது.விபத்தில், லிங்கசாமி, மித்ரன், அதே இடத்தில் பலியாயினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜீவா, மெர்சிலி மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை செல்லும் வழியில், இருவரும் உயிரிழந்தனர்.அவிநாசிபாளையம் போலீசார் மதன் குமாரை கைது செய்தனர். மதன்குமார், துாக்கக்கலக்கத்தில் இருந்ததால், கார் தறிகெட்டு ஓடி விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-செப்-202005:04:37 IST Report Abuse
Mani . V (யோவ் யாருய்யா அது? பெரிய இடத்து பையனா? அப்ப சரி) எல்லாம் விலகி போங்க. வீட்டை விட்டு வெளியில் வந்தது இவர்கள் தவறு. கார் ஓட்டிய அந்த தம்பி மேல் எந்த தவறும் இல்லை........ "பேசியபடி வரவேண்டிய தொகை வந்து விட்டதால் அந்த பணக்கார அப்பிராணி தம்பி மீது தவறில்லை என்று இந்த நிதிமன்றம் தீர்ப்பளிக்கிறது"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X