| பெண்ணை வழிமறித்து செயின் பறிக்க முயற்சி Dinamalar
பெண்ணை வழிமறித்து செயின் பறிக்க முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2020
04:59

நெல்லிக்குப்பம்; கடலுார், பாதிரிக்குப்பத்தை சேர்ந்தவர் குமார் மனைவி சிவசங்கரி, 45. இவர், நேற்று முன்தினம் இரவு நடுவீரப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தனது மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டி அருகே சென்ற சிவசங்கரியை, பைக்கில் வந்த மர்மநபர் வழிமறித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார்.சிவசங்கரி கூச்சலிட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததால், பைக்கில் வந்தவர்கள் தப்பி சென் றனர். இது குறித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X