விரைவில்: பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்...ஆயத்த பணியில் கல்வித்துறை தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
06:30

புதுச்சேரி: பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் முதற்கட்டமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில்அமல்படுத்த கல்வித்துறை ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது.



இதன் மூலம்68 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைவர்.புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தபோது மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் நவம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.



காலை சிற்றுண்டியாக இட்லி, கிச்சடி, பொங்கல், சட்னி மற்றும் சாம்பாருடன் வழங்கப்படும் என அறிவித்தார்.அதனையொட்டி இத்திட்டம் முதல் கட்டமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர் பணிகளில் பள்ளி கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.டெண்டர் விடும்பணி பல நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் அதில் 3 நிறுவனங்கள் பட்டியலை பள்ளி கல்வித் துறை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.



புதுச்சேரியில் 11, காரைக்காலில் 11, ஏனாமில்-1, மாகியில்-9 என 31 மத்திய உணவு தயாரிப்பு கூடங்கள் உள்ளன.காலை சிற்றுண்டி திட்டத்திற்கு புதுச்சேரியில் சண்முகாபுரம், ஏம்பலம் மதிய உணவு தயாரிப்பு கூடங்களும், காரைக்காலில் திருநள்ளார் உணவு தயாரிப்பு கூடம் தேர்வு செய்யப்பட உள்ளன.சண்முகாபுரம் மதிய உணவு கூடத்தில் 110 பள்ளிகளில் பயிலும் 30 ஆயிரம் மாணவர்களுக்கும், ஏம்பலம் மதிய உணவு தயாரிப்பு கூடத்தில் 93 பள்ளிகளில் பயிலும் 20 ஆயிரம் மாணவர்களுக்கும் சிற்றுண்டி தயாரிக்கப்பட உள்ளது.இதேபோல் காரைக்கால் திருநள்ளார் மதிய உணவு கூடத்தில் 106 பள்ளிகளில் பயிலும் 18 ஆயிரம் மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி தயாரிக்கப்பட உள்ளது.



ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 309 பள்ளிகளில் பயிலும் 68 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் அமலாக உள்ளது.கிராமப்புறங்களில் காலை 8.30 மணிக்கும், நகர் புறங்களில் காலை 8.00 மணிக்கும் சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு இரண்டாம் கட்டமாக ஏனாம், மாகி பிராந்தியங்களில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X