உறுப்பினர் சேர்க்கை முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
06:39

விருதுநகர்: விருதுநகரில் தி.மு.க.,வின் எல்லோருடன் நம்முடன் எனும் ஆன்லைன் வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கு மக்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது, என்றார்.



* காரியாபட்டி: மல்லாங்கிணறில் நடந்த முகாமில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசியதாவது, தொகுதி வாரியாக குறைந்தது பத்தாயிரம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.



விடுப்பு போராட்டம்



விருதுநகர்: அரசு துறை சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கண்ணன் செய்தி குறிப்பு: புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான நடவடிக்கை ரத்து உள்ளிட்ட 35 கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செப். 22) ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடக்கிறது, என்றார்.



ரத்த தான முகாம்



சிவகாசி: விஸ்வநத்தத்தில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட இளைஞரணி பா.ஜ., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் பூமாலைராஜா தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பார்த்தசாரதி, சுரேஷ்குமார், ஒலிம்பிக்செல்வம், சீனிவாசன், ரமேஷ் , ஆறுமுகச்சாமி, டாக்டர் கதிரவன் கலந்து கொண்டனர்



ஊராட்சி தலைவர் தர்ணா



விருதுநகர்: கூரைக்கூண்டு ஊராட்சி செயலாளர் அல்போன்ஸ்சிடம் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஊராட்சி தலைவி செல்வி கேள்வி கேட்ட போது அலுவலகத்தை பூட்டி சென்றார். இதை கண்டித்து ஊராட்சி தலைவி தர்ணா செய்தார். பி.டி.ஓ., ரவிக்குமார்: நிர்வாக முறைகேடுகள் நடந்திருந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.



எம்.எல்.ஏ..ஆய்வு



சாத்துார்: புதியதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி அலுவலகம், சுகாதார பணியாளர்கள் குடியிருப்பு, மரியன் ஊரணியில் பூங்கா, சென்ட்ரல் எக்ஸைஸ் தெருவில் குடிநீர் தொட்டி பணிகளை சாத்துார் எம்.எல்.ஏ., எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் ஆய்வு செய்தார்.நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட கவுன்சிலர் சீனியம்மாள் ராஜேந்திரன், நகர செயலாளர் வாசன், ஒன்றிய தலைவர் பழனியம்மாள் அக்ரி கணேசன் கலந்து கொண்டனர்.



அதிகாரிகள் ஆய்வு



சிவகாசி: வெள்ளூரில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மக்காச்சோள பயிரின் உயர் தொழில் நுட்ப செயல் விளக்க திடலை வேளாண் கூடுதல் இயக்குனர் கார்த்திகேயன், இணை இயக்குனர் உத்தண்டராமன் ஆய்வு செய்தனர். உதவி இயக்குநர் ரவிசங்கர், உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் பூவலிங்கம் உடனிருந்தனர்.



கல்வித்திருவிழா



ராஜபாளையம்: சுந்தரநாச்சியார்புரம் சமுதாய அரங்கில் கல்வித்திருவிழா நடந்தது. பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 18 பள்ளி மாணவர்களுக்கு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை நாடார் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X