சிவகங்கையில் எல்லை பிரச்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
06:59

சிவகங்கை : நகராட்சி, ஊராட்சி எல்லை பிரச்னையால் கைவிடப்பட்ட மாப்பிள்ளைதுரை ஊரணி கேட்பாரற்று கிடக்கிறது.



சிவகங்கையிலிருந்து மதுரை ரோட்டில் நகர் எல்லைப்பகுதியில் மாப்பிள்ளை துரை ஊரணி அமைந்துள்ளது. சிவகங்கை பேரூராட்சியாகஇருந்த போது ஒப்படைக்கப்பட்டது.இந்த ஊரணியில் நான்கு புறமும் மக்கள் பயன்பாட்டுக்காக கருங்கற்களால் ஆன படித்துறை அமைத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஊரணி கிணற்றில் இருந்து குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.



மக்கள் வீடுகளில் ஆழ்துளை அமைத்து தண்ணீர் எடுத்து வந்ததால் ஊரணியை கண்டு கொள்ளவில்லை. இருந்தாலும் அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்திற்கு காரணமாகவும் மக்கள் புழக்கத்திற்காகவும் பயன்பட்டு வந்தது.வரத்துக்கால்வாய்ஆக்கிரமிப்புஇந்த ஊரணிக்கான வரத்து கால்வாயை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாலும், நீர் வரத்து உள்ள பகுதியில்அரசு கலைக்கல்லுாரி சுற்றுச்சுவர் அமைத்து தடுத்ததாலும் முற்றிலுமாக வறண்டுவிட்டது. கலெக்டர் ஜெயகாந்தனிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததால் ஊரணியை மராமத்து செய்ய உத்தரவிட்டார்.இந்த ஊரணியை நகராட்சி நிர்வாகத்தினர் எங்கள் பராமரிப்பில் இல்லை வாணியங்குடி ஊராட்சி நிர்வாகம் என்றனர்.



ஊராட்சி நிர்வாகத்தை அணுகினால் நகராட்சி நிர்வாகம் தான் என எல்லை பிரச்னையில் நடவடிக்கை எடுக்கவில்லை.என்.பிரகாஷ் கூறியதாவது:இந்த ஊரணியை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. துார் வாருகிறோம் என்ற பெயரில்ஊரணியில் இருந்த கிராவல் மண்ணை கொள்ளையடித்தனர்.மக்கள் புகாரின் பேரில் மண் எடுக்கப்பட்ட இடங்களில் ஊரணியின் நடுப்பகுதியில் தோண்டி சமாளித்தனர். எங்களுக்கு தேவை ஊரணியின் வரத்துக்கால்வாயை துார் வார வேண்டும், என்றார்.



கே.மணிமுத்து கூறியதாவது:ஊரணியில் உள்ள கிணறு இரும்பு சல்லடை கொண்டு மூடப்பட்டது. நாளடைவில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கருங்கற்களால் ஆன நான்கு படித்துறைகளும் சேதமடைந்து சிதிலமடைந்துவிட்டது.ஊரணிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்.அதிகாரிகள் எல்லை பிரச்னையை பார்க்காமல் மக்களின் பயன்பாட்டுக்கு ஊரணியை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X