கொரோனா டிஸ்சார்ஜ் 15 ஆயிரத்தை நெருங்குகிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
09:45

மதுரை : மதுரையில் கொரோனா குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்குகிறது.


மதுரை மாவட்டத்தில் நேற்று 135 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதுவரை 14,790 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 86 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 15,878 ஆனது. இதுவரை 378 பேர் இறந்துள்ளனர்.


திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நேற்று ஒரே நாளில் 113 பேர் குணமடைந்தனர். மொத்தம் 7645 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். நேற்று 17 பெண்கள், 11 முதியவர்கள் உட்பட 82 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 8386 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 587 பேர் சிகிச்சையில் உள்ளனர். வேடசந்தூர் 70 வயது முதியவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.


தேனி : தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று 105 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகினர். மொத்தம் 13, 469 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று புதிதாக 53 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 14, 220 ஆக உயர்ந்தது. 62 வயது முதியவர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 246 ஆக உயர்ந்தது. திண்டுக்கல் புகையிலைப்பட்டியை சேர்ந்த 67 வயது ஆண் கொரோனா முடிவுகள் வெளி வரும் முன் உயிரிழந்தார்.


ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து நேற்று 53 பேர் மீண்டனர். புதிதாக 15 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 5378 பேர் பாதிக்கப்பட்டதில் 5038 பேர் குணமடைந்தனர். 225 பேர் சிகிச்சையில் உள்ளனர். 115 பேர் பலியாகினர்.


சிவகங்கை : சிவகங்கையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மதுரை மேலுார், சிவகங்கை தமறாக்கியை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.


விருதுநகர் : விருதுநகரில் 49 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 47 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இறப்பு இல்லை. இதுவரை 14,031 பேர் பாதிக்கப்பட்டதில் 13,522 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 302 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.


திருநெல்வேலி : திருநெல்வேலியில் நேற்று 103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 10596 பேர் குணமாகியுள்ளனர். நேற்று 92 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 11815 ஆனது. தற்போது 1025 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 194 பேர் இறந்துள்ளனர்.


தென்காசி : தென்காசியில் நேற்று 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 6068 பேர் குணமடைந்தனர். நேற்று 87 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6794 ஆனது. தற்போது 600 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 126 பேர் இறந்துள்ளனர்.


துாத்துக்குடி: துாத்துக்குடியில் நேற்று 73 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 11959 பேர் குணமாகியுள்ளனர். நேற்று 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிப்பு 12858 ஆனது. தற்போது 779 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 120 பேர் இறந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X