| ஏரிக்கரையில் கொட்டப்படும் குப்பையால் தண்ணீர் மாசு Dinamalar
ஏரிக்கரையில் கொட்டப்படும் குப்பையால் தண்ணீர் மாசு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2020
10:06

வீரபாண்டி: ஏரிக்கரையில் கொட்டப்படும் குப்பையால், தண்ணீர் மாசடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சேலம், புத்தூர் அக்ரஹாரம் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள புத்தூர் ஏரிக்கு, திருமணிமுத்தாற்றில் இருந்தும், கஞ்சமலையில் பெய்யும் மழைநீரின் ஒரு பகுதியும் வருவதால், எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். ஆனால், ஓராண்டுக்கு மேலாக, அப்பகுதி மக்கள் மட்டுமன்றி, ஊராட்சி தூய்மை பணியாளரும், பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பையை கொண்டு வந்து ஏரிக்குள் கொட்டி வருகின்றனர். இதனால், ஏரியின் பரப்பு குறைந்து, நீர்நிலை அழிக்கப்படுவதோடு, கழிவால் ஏரி நீரும் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. அதனால், குப்பை கொட்டுவதை முழுமையாக தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X