போலீஸ் உடற்தகுதி தேர்வில் புது சலுகை: ஒரு வாய்ப்பு மூன்று முறையாக அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
10:18

சேலம்: காவல்துறையில் நடத்தப்படும் உடற்தகுதி தேர்வில், ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் வாய்ப்பு, தற்போது மூன்று முறையாக அதிகரித்து, புது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 10 ஆயிரத்து, 906 பேரை தேர்வு செய்ய, கடந்த, 17ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், இதுவரை உடற்தகுதி தேர்வுகளில், ஆண்களுக்கு கயிறு ஏறுதல், நீளம், உயரம் தாண்டுதலில் வழங்கப்பட்ட, ஒரே ஒருமுறை என்ற வாய்ப்பை, மூன்று முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெண்களுக்கு, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கிரிக்கெட் பந்து எறிதலில், மூன்று முறையாக வாய்ப்பை அதிகரித்துள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள, தகவல் கையேட்டில் இச்சலுகை விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தேர்வுக்கு மட்டுமின்றி, எஸ்.ஐ., தேர்வுக்கும், இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு துறையில், வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்துள்ள, லட்சக்கணக்கான இளைஞர், இளம்பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது: நான்காண்டாக தொடர்ச்சியாக தேர்வு நடத்தி, ஆட்களை தேர்வு செய்தபோதும், காலி பணியிடம், 100 சதவீதம் பூர்த்தி செய்யப்படவில்லை. எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோர், உடற்தகுதி தேர்வில், குறிப்பாக ஆண்கள் கயிறு ஏறுதல், பெண்கள் நீளம் தாண்டுதலில் வெற்றி பெற முடியாமல் வெளியேறுகின்றனர். இதனால் அதிக மதிப்பெண் பெறுவோர், இத்துறைக்கு வருவது குறைந்து வருகிறது. இதை சரிசெய்ய, உடற்தகுதி தேர்வில், சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் போலீசின் தரம் எந்த விதத்திலும் குறையாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


அக்.,3ல் எஸ்.ஐ.,க்கு உடற்தகுதி தேர்வு: காலியாக உள்ள, 969 எஸ்.ஐ., பணியிட எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற, 6,000க்கும் மேற்பட்டோருக்கு, உடற்தகுதி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை, ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில், அக்.,3ல் ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு தொடங்க உள்ளது. பெண்களுக்கு, அக்.,8ல் தொடங்க உள்ளது. இதிலேயே சலுகை நடைமுறைக்கு வருகிறது.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X