ஜி.ஐ.எஸ்., தொழில்நுட்பம்: மின் வாரியம் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
11:27

சென்னை : அலுவலகத்தில் இருந்தபடி எந்த டிரான்ஸ்பார்மர் வாயிலாக மின் இணைப்பு வழங்கலாம் என்பதை உள்ளடக்கிய ஜி.ஐ.எஸ். என்ற புவியியல் தகவல் அமைப்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு மாவட்ட பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


தமிழக மின் வாரியம் துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின் வழித்தடம், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி, மின் கம்பம், கேபிள் உதவியுடன் மின் வினியோகம் செய்கிறது. ஜி.ஐ.எஸ். எனப்படும் ஜியோகிரபிக் இன்பர்மேஷன் சிஸ்டம்' அதாவது புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையில் மின் வாரியம் அசையா சொத்துக்களின் விபர வரைபடம் மற்றும் நுகர்வோர் விபரங்களை சேகரித்து வருகிறது.அந்த வரைபடம் மென்பொருள் வடிவில் பிரிவு அலுவலக கம்ப்யூட்டரில் இருக்கும்.


அதில் அலுவலகத்திற்கு உட்பட்ட மின் வழித்தடம் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட அனைத்து மின் வினியோக சாதனங்களும் இடம்பெறும். மேலும் எத்தனை நுகர்வோருக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது; யார் எந்த பிரிவில் உள்ளனர் என்ற விபரங்களும் இருக்கும். இதனால் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டிய இடத்திற்கு நேரில் செல்லாமல் கம்ப்யூட்டர் வாயிலாகவே எந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் வழங்க முடியும் என்பதை அறியலாம்.


ஒவ்வொரு டிரான்ஸ்பார்மரிலும் செல்லும் மின்சார அளவு எந்த இடத்தில் மின்னழுத்த பிரச்னை மின் இழப்பு ஏற்படுகிறது என்பதை உடனுக்குடன் அறிய முடியும்.மேலும் ஒரு அலுவலகம் வாயிலாக வினியோகிக்கப்பட்ட மின்சாரம் அதற்கு ஏற்ப அங்கு மின் கட்டணம் வசூலாகி உள்ளதா என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அறியலாம்.இந்த ஒருங்கிணைப்பு பணிகளுக்காக மின் வினியோக சாதனங்களில் நவீன கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.


இதனால் சென்னையில் இருந்தபடி உயரதிகாரிகள் அனைத்து அலுவலகங்களின் செயல்பாட்டை கம்ப்யூட்டரில் கண்டறிய முடியும்.இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:புவியியல் வரைபட மென்பொருள் வாயிலாக மின் வினியோகம் மின் தடை ஏற்படும் இடங்கள் மின் கட்டணம் செலுத்தாதவர் உள்ளிட்ட விபரங்களை உடனுக்குடன் கண்டறிந்து பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கலாம்.அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை அக். 30க்குள் முடிக்குமாறு மண்டல தலைமை மற்றும் மாவட்ட மேற்பார்வை பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
24-செப்-202012:29:54 IST Report Abuse
Loganathan Kuttuva மின் திருட்டு களையப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X