| 'போஷன் அபியான்' திட்டம்: அனைத்து துறை பங்களிப்பு Dinamalar
'போஷன் அபியான்' திட்டம்: அனைத்து துறை பங்களிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2020
12:27

திருப்பூர் : 'போஷன் அபியான் திட்டத்தில், அனைத்து துறையினரின் பங்களிப்பும் அவசியம்' என்று, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், நாடு முழுவதும் 'போஷன் அபியான்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கன்வாடிகளில், காய்கறித்தோட்டம் அமைத்தல், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு அளித்து ஆரோக்கியமான குழந்தைகளை பிரசவிக்கச் செய்தல் போன்ற இலக்குடன், இந்தாண்டு, 'போஷன் அபியான்' மாதவிழா நடந்து வருகிறது. அனைத்து அரசுத்துறைகளும் பங்கெடுத்து, சேவை வழங்க வேண்டுமென, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறுகையில்,


'இந்தாண்டு முதல், வருவாய், குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, மின் வாரியம், தோட்டக்கலை என, அனைத்து அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து விழா நடத்தி, செயல்திட்டம் தயாரித்து பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X