கீழே விழ காத்திருக்கும் மின் கம்பத்தால் ஆபத்து | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கீழே விழ காத்திருக்கும் மின் கம்பத்தால் ஆபத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2020
22:42

பல்லடம்:முறிந்து தொங்கும் மின் கம்பத்தால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.பல்லடம், வடுகபாளையம் -- கொசவம்பாளையம் செல்லும் ரோட்டில், மின் கம்பம் ஒன்று, இரண்டாக முறிந்து, ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு உள்ளது.அப்பகுதியினர் கூறியதாவது:இந்த ரோட்டில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வீடுகள் நிறைந்த இப்பகுதியில், மின்கம்பம் முறிந்து, தொங்கிய நிலையில் உள்ளது. சமீப நாட்களாக, பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.இச்சூழலில், முறிந்த மின்கம்பம் பலத்த காற்று மழைக்கு, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழலாம். எனவே, விபத்து ஏற்படும் முன் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X