செய்தி சில வரிகளில்...:சென்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2020
00:15

பெண்ணிடம் செயின் பறிப்பு



பம்மல்: பம்மல், கிரிகோரி தெருவைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி, 37. இவரது மாமியார் ஜோதி. இருவரும், நேற்று மதியம், டூ - வீலரில் சங்கர் நகரில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். பம்மல் மெயின் ரோடு, கோகுலம் டீக்கடை அருகே சென்றபோது, மற்றொரு டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள், தமிழ்செல்வியின், 4 சவரன் தாலி செயினை பறித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாயினர். இது குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


வழிப்பறி திருடர்களுக்கு 'காப்பு!





'பெரம்பூர்: பெரம்பூர், முரசொலி மாறன் பூங்கா அருகே, நேற்று முன்தினம் இரவு, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிய, மூவர் சிக்கினர். விசாரணையில், ஓட்டேரியை சேர்ந்த விக்னேஸ்வரன், 19, அரவிந்த், 21, அயனாவரம் வினோத்குமார், 19, என்பதும், தனியாக சிக்குவோரிடம், மொபைல் போன் பறித்தது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து, இரண்டு டூ - வீலர், ஒரு சைக்கிள், ஏழு மொபைல் போன்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.



கஞ்சா வியாபாரி சிக்கினார்



மயிலாப்பூர்: மயிலாப்பூர், லஸ் பகுதியில், 19ம் தேதி இரவு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, மயிலாப்பூரைச் சேர்ந்த, யாசர், 21, சக்திவேல், 26, ஆகிய இருவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, வடபழநியைச் சேர்ந்த, ஆசிப்கான், 24, என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, போலீசாரிடம், ஆசிப்கான் சிக்கினார். அவர்களிடம் இருந்து, 3.5 கிலோ கஞ்சா, இரண்டு இருசக்கர வாகனங்கள், இரண்டு மொபைல் போன்கள், பறிமுதல் செய்யப்பட்டன.



லாரி மோதி வாலிபர் பலி



புதுவண்ணாரப்பேட்டை: உத்தர பிரதேசம், ராம்புர் நாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா பால் சிங், 27. இவர், புதுவண்ணாரப்பேட்டை, எஸ்.என்.செட்டி தெரு வழியாக, நேற்று அதிகாலை நடந்து சென்ற போது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காசிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.



வாலிபருக்கு 354 நாள் சிறை



எண்ணுார்: எண்ணுார், சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 26. இவர், எண்ணுார் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். ஆக., 28ல், மாதவரம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் முன் ஆஜராகி, திருந்தி வாழ்வதாக, பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இந்நிலையில், கடந்த, 6ம் தேதி, குற்றச்செயலில் ஈடுபட்டு, எண்ணுார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நன்னடத்தை விதி மீறியதாக, துணை ஆணையர், 354 நாட்கள் பிணையில் வெளி வர முடியாத வகையில், தினேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.



வாலிபருக்கு வெட்டு: 7 பேர் கைது



ஆர்.கே.நகர்: தண்டையார்பேட்டை, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் வேலு, 27; டிரைவர். நேற்று முன்தினம் நள்ளிரவு, தன் நண்பர் சையதுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, மூன்று டூ - வீலரில் வந்த கும்பல், முன்விரோதம் காரணமாக, வேலுவை சரமாரியாக வெட்டி தப்பியது. அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக, மணலியைச் சேர்ந்த தினேஷ், 23, தண்டையார்பேட்டையை சேர்ந்த கணேஷ் 21 உள்ளிட்ட, ஏழு பேரை, ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.



விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு



புழல்: பெரும்பாக்கம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 65. இவர், புழல் சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் காலை, புழல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, சரக்கு வாகனம் மோதி படுகாயமடைந்தார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று காலை உயிரிழந்தார். இது குறித்து, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.



வீட்டில் நகை திருடியோருக்கு வலை



மடிப்பாக்கம்: மூவரசம்பேட்டை, பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி, 60; ஓய்வு பெற்ற இ.எஸ்.ஐ., மருத்துவமனை ஊழியர். இவர், நேற்று முன்தினம், வீட்டின் கீழ் தளத்தை பூட்டி, சாவியை அருகில் உள்ள ஜன்னலில் வைத்து, வெளியில் சென்றுள்ளார். முதல் தளத்தில், குடும்பத்தினர் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், வீட்டை திறந்து, பீரோவில் இருந்த, 4 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், மொபைல் உள்ளிட்டவற்றை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மடிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X