தந்தையின் பிரேத பரிசோதனை :மகன் கலெக்டரிடம் புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2020
00:34

கோவை:தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நிவாரணத்தொகை வழங்க தாமதமாவதால், நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மார்ட்டின் நிறுவன காசாளரின் மகன் ரோஹிந்த்குமார், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்தார். அவரிடம் வருமான வரித்துறையினர் கடந்தாண்டு, ஜூன் மாதம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்பு, வீடு திரும்பிய பழனிசாமி, காரமடை அருகேயுள்ள குளத்தில் சடலமாக கிடந்தார்.பழனிச்சாமியின் உடற்கூராய்வை, பாதிக்கப்பட்டவரின் சார்பாக ஒரு மருத்துவரும், அரசு மருத்துவர்களும் இணைந்து செய்ய, மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டவரின் மருத்துவர், உடற்கூராய்வு அறிக்கையை கொடுத்துள்ளார்.கொலையானவரின் மகன் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், 'அரசு மருத்துவர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர். உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இவ்வழக்கை முடித்து, நிவாரணம் வழங்க உத்தரவிட்டும் தாமதப்படுத்துகின்றனர். வழக்கை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X