| திருப்பதி சென்றது ஆண்டாள் மாலை Dinamalar
திருப்பதி சென்றது ஆண்டாள் மாலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2020
00:48

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, திருப்பதி எடுத்துச் செல்லப்பட்டது.திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளன்று, ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி, ஆண்டாள் கோவிலில் நேற்று நடந்தது.இதை முன்னிட்டு, மதியம், 12:00 மணிக்கு, வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு மாலை, கிளி, பட்டு வஸ்திரம், மங்கல பொருட்கள் சாற்றி, வாசுதேவ பட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார்.பின், ஸ்தானிகம் ரமேஷ் தலைமையில், கோவில் பிரகாரம், வீதிகளில் சுற்றி வந்து, காரில் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X