செய்திகள் சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2020
00:49

தீக்குளித்து தற்கொலைஇடையகோட்டை: புலியூர்நத்தம் ஏ.டி.காலனியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, திருச்செங்கோடு மாணிக்கபுரத்தைச் சேர்ந்த காதலன் பிரவீன் 20, திருமணம்செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்றார். சிறுமியை கடத்தியதாக இடையகோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. பிரவீனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மன அழுத்தத்தில் இருந்த சிறுமி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இடையகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.மூவர் கைதுசின்னாளபட்டி: கலிக்கம்பட்டி அருகே சின்னாளபட்டி போலீசார்எஸ்.ஐ., முத்தமிழ்ச்செல்வி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். உரிய ஆவணமின்றி மணல் எடுத்து வந்த டிராக்டர் பிடிபட்டது. டிரைவர் முத்துப்பாண்டி, சின்னாளபட்டி பூஞ்சோலையில் ரங்கசாமியின் மணல் விற்பனை நிலையத்திற்குகொண்டு செல்வதாக தெரிவித்தார். போலீசார், முத்துப்பாண்டி, ரங்கசாமி, செட்டியபட்டி கணேசன் ஆகியோரை கைது செய்தனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.மணல் திருட்டுக்கு குண்டாஸ்திண்டுக்கல்: நத்தம் ரோட்டில் கடந்த செப்.11 ல் செட்டியபட்டி ராஜமோகன் 4 என்பவர் டிராக்டரில் மணல் திருடியுள்ளார்.இவரை அதேபகுதியில் ரோந்து பணியில் இருந்த ஏட்டு வேலுமணி மணலுடன் பிடித்து கைது செய்தனர். தற்போது சிறையில் உள்ள ராஜமோகனை எஸ்.பி.ரவளிபிரியா உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.மக்கள் குறைதீர் கூட்டம்குஜிலியம்பாறை: தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் பயிற்சி உதவி கலெக்டர் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. தாசில்தார் சக்திவேலன் முன்னிலை வகித்தார். பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.வேடசந்துாரில் நடந்த முகாமில்டி.ஆர்.ஓ., கோவிந்தராசு தலைமை வகித்தார். தாசில்தார் லதா முன்னிலை வகித்தார். பொது மக்களிடம் 48 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.காவலர்களுக்கு வரவேற்புதிண்டுக்கல்: கொரோனாவால் போலீசார் அதிகம் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இவர்களில் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய 1 இன்ஸ்பெக்டர், 1 சார்பு ஆய்வார், 3 சிறப்பு சார்பு ஆய்வாளர் உட்பட 4 காவலர்களை எஸ்.பி.ரவளிபிரியா மலர்தூவி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.காப்பகம் மீதுபாலியல் புகார்திண்டுக்கல்: மதுரை சோழ வந்தானைச் சேர்ந்தவர் விஜய லட்சுமி 52. இவரை திண்டுக்கல் அருகே ஆதரவற்ற முதியோர் காப்பகம் நடத்தி வரும் ஒருவர்காப்பக வேலைக்கு அழைத்துஉள்ளார். அதன்படி விஜயலட்சுமி யும் வந்துள்ளார். காப்பகத்தில் முதியவர்கள் எவரும் இல்லை. இங்கு பெண்களை வேலைக்கு அழைத்து பாலியல் வன்முறையில் ஈடுபடுவதாக, விஜயலட்சுமி மற்றும் ஹிந்து தேசிய கட்சி அமைப்பினருடன் எஸ்.பி., ரவளிப்பிரியாவிடம் புகார் அளித்தனர்.டிராக்டர் பறிமுதல்பழநி: கோதை மங்கலம் வடக்கு தெருவில் வசிக்கும் கண்ணிமுத்து மகன் காட்டுராஜா 25. இவர் அங்கிருந்து உடைகல்லை டிராக்டரில் எற்றி அனுமதியில்லாமல் கொண்டு சென்றார். பழநி தாலுகா போலீசார் கற்களுடன் டிராக்டரை பறிமுதல் செய்து காட்டுராஜாவை கைது செய்துள்ளனர்.ஆடுகள் திருட்டுவடமதுரை: வடமதுரை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் கனகலட்சுமி 48. இவர் வளர்த்து வந்த 10 ஆடுகளை கடந்த ஏப்.14ல் ரெட்டியபட்டி மூர்த்தி மற்றும் சிலர் திருடிச் சென்றனர். திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் கனகலட்சுமி புகார் அளித்தார். இதனடிப்படையில் வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.ஆத்துாரில் முகாமில் 'கெடுபிடி'சின்னாளபட்டி: ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் தனித்துணை கலெக்டர் சிவக்குமார் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. தாசில்தார் பவித்ரா முன்னிலை வகித்தார். உடல் வெப்ப பரிசோதனை, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்திருத்தல், முதியோர், குழந்தைகளுடன் வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு கடைபிடிக்கப்பட்டன. முகாமில் 34 மனுக்கள் பெறப்பட்டன. பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.சேதமடைந்த ரோடுகொடைக்கானல்: நகராட்சியில் கீழ்க்குண்டாறு குடிநீர் திட்டத்திற்காக நல்ல நிலையில் இருந்த ரோடுகள் பைப் லைன் அமைக்க தோண்டப்பட்டதால் சிதிலமடைந்தது. மறு சீரமைக்க மெத்தனம் காட்டியதால் சுற்றுலா பயணிகள் தடுமாறி விழும் அவலம் உள்ளது.ரைபிள்ரேஞ்ச், சேரன் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் உருக்குலைந்த ரோடால் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இறந்தவர் அடையாளம் தெரிந்ததுவேடசந்துார்: ரெங்கமலை பகுதியில் இருநாட்களுக்கு முன் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மரத்தில் தொங்கியது. இது குறித்து விசாரித்த போலீசார், இறந்தவர் கும்பகோணத்தில் நிதிநிறுவனம் நடத்திய வேலுச்சாமி 52, என அறிந்தனர். கொசவபட்டியில் தனது தாயை பார்க்க வந்துள்ளார். மனைவி ஏற்கனவே இறந்துவிட்ட துக்கத்தில், வேலுச்சாமி, ரெங்கமலை பகுதியில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.ஆசிரியருக்கு கலந்தாய்வு வலியுறுத்தல்பழநி: தேசிய ஆசிரியர் சங்க பொது செயலாளர் கந்தசாமி கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்விதுறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களின் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிகள் திறக்கும் முன்பே பணியிட மாறுதல், பதவி உயர்விற்கான கலந்தாய்வினை நடத்த வேண்டும். போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.சர்வீஸ் ரோடு தேவைஅய்யலுார்: அய்யலுார் - தங்கம்மாபட்டி இடையே வண்டி கருப்பணசுவாமி கோயில் உள்ளது. இவ்வழியே பயணிப்போர், கோயில் முன்பு வாகனத்தை நிறுத்தி வழிபடுகின்றனர்.அச்சமயம் அந்த வழியே வேகமாக வரும் மற்ற வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.பலமுறை இவ்வாறு விபரீதம் நிகழ்ந்து வாகனங்கள், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விபத்தை தடுக்க, நான்கு வழிச்சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X