| காய்கறித்தோட்டம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் அமைகிறது ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் Dinamalar
காய்கறித்தோட்டம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் அமைகிறது ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2020
01:26

மதுரை: ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடும் நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள 420 கிராம ஊராட்சிகளிலுள்ள அங்கன்வாடி மையங்ளில் காய்கறித்தோட்டம் அமைக்க ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் வினய் அறிவுறுத்தியுள்ளார்.


கர்ப்பிணிகள் கருவூற்ற நாள் முதல் குழந்தை பெற்ற பத்து மாதங்கள் வரை எடுத்து கொள்ள வேண்டிய சத்தான உணவுகள், குழந்தைகள் வளர்ச்சிக்கு ஏற்ப ஊட்டச்சத்து உணவுகளை எடுப்பது தொடர்பாக மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் கண்காட்சி, பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு தேவையான காய்கறி, கீரை வகைகளை காய்கறி தோட்டம் அமைத்து பெற கலெக்டர் அறிவுறுத்தியிருக்கிறார்.ஊராட்சி தலைவர்கள் ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மைய வளாகத்திலுள்ள குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து மண்ணை மேம்படுத்தி கத்திரி, வெண்டை, தக்காளி, பப்பாளி மற்றும் கீரை வகைகளை நடவு செய்ய வேண்டும். தற்போது மழை பெய்வதால் இந்த வாய்ப்பை பயன் படுத்தி தோட்டம் அமைக்க வேண்டும். சுற்றி வேலி அமைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான செலவினத்தை அனுமதிக்க ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X