27 இடங்களில் வெள்ள பாதிப்பு அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2020
06:50

மதுரை : ''பருவமழை காலத்தில் மதுரை மாவட்டத்தில் 27 இடங்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் என பேரிடர் மேலாண்மை துறை எச்சரித்துள்ளதாக'' அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.



வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸில் தீயணைப்பு துறை மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைக்கான ஒத்திகை நடந்தது. அமைச்சர் உதயகுமார் துவக்கினார். எம்.எல்.ஏ.,க்கள் சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம், கலெக்டர் வினய், டி.ஆர்.ஓ., செல்வராஜ், கலந்து கொண்டனர்.



அமைச்சர் பேசியதாவது: பருவமழை காலத்தில் மாவட்டத்தில் 27 இடங்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் என, பேரிடர் மேலாண்மை துறை எச்சரித்துள்ளது. அதில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் முனிச்சாலை, அண்ணாத்தோப்பு, அண்ணாநகர், பீபி குளம், தல்லாகுளம், செல்லுார், வண்டியூர், தத்தனேரி, ஐராவதநல்லுார் பகுதிகளில் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.



753 பேர் அடங்கிய 117 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 825 கண்மாய்கள் துார்வாரப்பட்டு மழைநீர் சேகரிப்புக்கு தயாராக உள்ளது. 33 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 167 பாலங்கள், 5032 சிறுபாலங்களில் மண் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 53 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X