| கொரோனா அச்சத்தால் இறந்த கணவர் முகத்தை கூட காண அனுமதிக்கவில்லை; 3 பெண் குழந்தைகளுடன் தாய் கண்ணீர் Dinamalar
கொரோனா அச்சத்தால் இறந்த கணவர் முகத்தை கூட காண அனுமதிக்கவில்லை; 3 பெண் குழந்தைகளுடன் தாய் கண்ணீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2020
07:06

மதுரை : கொரோனா அச்சத்தால் இறந்த கணவரின் முகத்தை கூட காண அனுமதிக்கவில்லை என மதுரையில் கலெக்டர் வினய்யிடம் 3 பெண் குழந்தைகளுடன் தாய் ரேவதி கண்ணீர் வடித்தார்.



திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆண்டிவடன்செட்டியூர் வடிவேல் 33, மனைவி ரேவதி. அவர் கூறியதாவது: செப்., 6 நெஞ்சுவலியால் அவதியுற்ற கணவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். காய்ச்சல் இருந்ததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.



சிகிச்சை பலனின்றி இறந்தார். பரிசோதனை முடிவு வராத நிலையில் கொரோனா இருக்கலாம் என கருதி கொரோனா வழிகாட்டுதல்படி அவரது உடல் தத்தனேரியில் எரியூட்டப்பட்டது.பின் கணவருக்கு 'கொரோனா இல்லை' என மருத்துவ கல்லுாரி சார்பில் சான்று வழங்கப்பட்டது.



கொரோனா அச்சத்தால் கணவர் முகத்தை கூட கடைசி நிமிடத்தில் காண அனுமதிக்கவில்லை. மூன்று பெண் குழந்தைகளுடன் சிரமப்படுகிறேன், என்றார்.



ஏதாவது ஒரு வேலை வழங்கும்படி கலெக்டரிடம் முறையிட்டார். அவருக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X