| குற்றச் செயலில் ஈடுபடும் சிறார்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் போலீசார் Dinamalar
குற்றச் செயலில் ஈடுபடும் சிறார்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் போலீசார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2020
00:48

வளசரவாக்கம் : குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளம் சிறுவர்களை மீட்டு, வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.



சென்னையில், சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இந்த சிறுவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, மாநகர போலீசார் பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.இதில், வளசரவாக்கம்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மொபைல் பறிப்பு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவர்கள், இளைஞர்களை மீட்டு, நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் பணியில், வளசரவாக்கம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



இவ்வாறு மீட்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களில் பணி செய்து வரும், ஐந்து பேர், நேற்று வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமைவீரனை நேரில் சந்தித்து, தங்கள் முதல் மாத ஊதியத்தை அவரிடம்வழங்கி, வாழ்த்து பெற்றனர்.அவர்களுக்கு, குற்றங்களில் ஈடுபடக் கூடாது எனவும், நண்பர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், போலீசாருக்கு தகவல்தெரிவித்து, அவர்களையும் நல்வழிப்படுத்த வேண்டும் எனவும், அறிவுரை வழங்கப்பட்டது.



மேலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இளம் சிறார்களை கண்டறிந்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என, போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X