கடல் போல் காட்சியளிக்கும் மாயனூர் கதவணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2020
09:53

கரூர்: தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், மாயனூர் கதவணை, செட்டிப்பாளையம் தடுப்பணை ஆகியவை, கடல் போல் காட்சி அளிக்கிறது.


மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன், 12 முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் வரத்து, மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் மாறுபட்டது. நேற்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 18 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மேலும், பவானிசாகர் அணை, அமராவதி அணை மற்றும் நொய்யல் ஆற்றின் தண்ணீரும், காவிரியாற்றில் கலக்கிறது. இதனால், கரூர் அருகே மாயனூரில் உள்ள கதவணைக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 18 ஆயிரத்து, 402 கன அடி தண்ணீர் கதவணைக்கு வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 18 ஆயிரத்து, 907 கன அடியாக அதிகரித்தது. கதவணையில் தற்போது, 1.3 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், கதவணை கடல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், மேட்டூர் அணை உள்ளிட்ட, பல்வேறு அணைகளில் இருந்து வரும் உபரி தண்ணீர், மாயனூர் கதவணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு, குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு, 17 ஆயிரத்து, 687 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மேலும், நான்கு பாசன கிளை வாய்க்கால்களில், 1,220 கன அடி தண்ணீர், மாயனூர் கதவணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது.


* திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த, 5 முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அணை நீர்மட்டம், 88 அடியை எட்டியதால் கடந்த, 19 ல் அமராவதி ஆறு, புதிய பாசன வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை, கரூர் அருகே உள்ள செட்டிப்பாளையம் தடுப்பணைக்கு வந்து சேர்ந்தது. இதனால், தடுப்பணை நிரம்பி, 12 ஷட்டர்கள் வழியாக, தண்ணீர் அமராவதி ஆற்றில் சென்றது. தற்போது, செட்டிப்பாளையம் தடுப்பணை நிரம்பி, கடல் போல் காட்சியளிப்பதால், சுற்று வட்டார பகுதி மக்கள், தடுப்பணையை பார்த்து வருகின்றனர். நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அமராவதி அணையில் இருந்து, வினாடிக்கு ஆற்றில், 2,800 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. அணை பகுதியில், 1 மி.மீ., மழை பெய்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 89.51 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 3,640 கன அடி தண்ணீர் வந்தது.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X