| வெங்ககல்பட்டி பிரிவில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு Dinamalar
வெங்ககல்பட்டி பிரிவில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2020
09:57

கரூர்: கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெங்ககல்பட்டி பிரிவு சாலை உள்ளது. இதன் வழியாக, திண்டுக்கல் மாவட்டத்துக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், வெள்ளியணை மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதியில் இருந்து, வெங்ககல்பட்டி பிரிவு வழியாக பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். திருச்சி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள், கரூர் செல்ல, வெங்ககல்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள, மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும். ஆனால், ஒரு கிலோ மீட்டர் தூரம் வெள்ளியணை சாலையில் சென்று, இடதுபுறம் திரும்பி மேம்பாலத்தில் செல்ல வேண்டியுள்ளது. இதனால், திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் சென்று வலது புறம் திரும்பி, இணைப்பு சாலை வழியாக கரூருக்கு செல்கின்றன. அப்போது ஏற்படும் விபத்துகளில் சிக்கி, பலர் காயம் அடைகின்றனர். இதனால், வெங்ககல்பட்டி பிரிவு சாலையில், மேம்பாலத்தின் கீழ் பகுதியில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: வெங்ககல்பட்டி பிரிவு சாலை, விபத்து மையமாக மாறி வருகிறது. திருச்சியில் இருந்து வரும் வாகனங்க,ள் மேம்பாலத்தில் செல்லாமல், கீழ் பகுதியில் செல்கின்றன. இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், வெங்ககல்பட்டி பிரிவு பகுதிகளில் வாகனங்கள் அதிகவேகமாக சென்று வருகின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தவிர்கவும், ரவுண்டானா அமைக்க வேண்டியது அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X