மாணவர்கள் உருவாக்கிய எலக்ட்ரிக் பைக்! 5 ரூபாய் செலவில் 25 கி.மீ., பயணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 செப்
2020
00:48
பதிவு செய்த நாள்
செப் 24,2020 00:24

கோவை:கோவை கல்லுாரி மாணவர்கள் எரிபொருள் மாசை குறைத்து, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில், ஐந்து ரூபாய் செலவில், 25 கி.மீ., வரை செல்லக் கூடிய எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளனர்.போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு சுற்றுசூழலில் கடுமையான மாசை ஏற்படுத்துகிறது.


ஒரு நபர் சராசரியாக நாள் ஒன்றுக்கு, 10 கி.மீ., வாகனத்தை இயக்கினால் ஆண்டுக்கு, 60 முதல் 70 கிலோ கார்பன் டைஆக்சைடு போன்ற காற்றை மாசுப்படுத்தும் வாயுக்களை வெளியிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.கோவை, குமரகுரு இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் ஒன்றிணைந்து, 'டீம் ரிக்' என்ற பெயரில் ஒரு எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளனர். இந்த பைக்கில், 5 ரூபாய் செலவில், 25 கி.மீ., வரை பயணிக்கலாம் என, கூறுகின்றனர்.எலக்ட்ரிக் பைக்கை வடிவமைத்துள்ள இயந்திரவியல் துறை மாணவர்கள் கிரண் மற்றும் ஆதி சீனிவாசன் கூறியதாவது: முப்பரிமாண தொழில்நுட்ப வசதிகளை கொண்டு எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளோம். பொதுவாக ஒரு இருசக்கர வாகனம், 110 கிலோ எடை இருக்கும். நாங்கள் தயாரித்துள்ள எலக்ட்ரிக் பைக், 40 கிலோ மட்டுமே. அதிகபட்சமாக, 30 கி.மீ., வேகத்தில் செல்லலாம்.


ஒரு முறை, இரண்டு மணிநேரத்துக்கு பேட்டரி சார்ஜ் செய்தால், 20-25 கி.மீ., துாரம் வரை பயணம் செய்ய முடியும்.இந்த பைக்கில், 20 கி.மீ., செல்ல, ஐந்து ரூபாய் மின் கட்டணம் செலவு செய்தால் போதும். இந்த வாகனத்துக்கு காப்புரிமை பெற்ற பின், அடுத்த கட்ட பணிகள் நடத்த ஆலோசித்துள்ளோம்.இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.இந்த வாகனத்துக்கு, லித்தியம் ஐயான் 48 வி 15 ஏஎச்., பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை முழு பேட்டரி சார்ஜ் செய்ய,0.6 யூனிட் மின்சாரம் தேவைப்படும். பேட்டரி முழுவதும் சார்ஜ் செய்ய, 2.5 மணி நேரம் எடுக்கும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaidhyanathan - coimbatore,இந்தியா
24-செப்-202012:28:39 IST Report Abuse
Vaidhyanathan கலக்குங்கடா செல்லங்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X