போலீஸ் செய்தி:
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2020
00:43

பெட்ரோல் ஊற்றிமாணவர் தற்கொலைமதகுபட்டி: சிவகங்கை அருகே அழகமானேரி ராஜாராம். இவர் சவுதியில் பணிபுரிகிறார். இவரது மகன் ஸ்ரீராம் 15. மேலுாரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கிறார். இவர், முறையாக ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதில்லை என அவரது தாய் திட்டியுள்ளார்.



தனக்கும் படிப்புசரியாக வராத கவலையில் இருந்த மாணவர், செப்.,21 அன்று மாலை 6:00 மணிக்கு வீட்டில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு இறந்தார். இன்ஸ்பெக்டர் சீராளன் விசாரிக்கிறார்.கருவேல மரம் 3 டன் கடத்தல்ஒருவர் மீது வழக்கு திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் அருகே பண்ணைதிருத்தியை சேர்ந்தவர்சாந்தமூர்த்தி. இவர் அரசு புறம்போக்கு நிலத்தில் வளர்ந்திருந்த 3 டன் கருவேல மரங்களை வெட்டி கடத்தியுள்ளார். கருங்குளம் வி.ஏ.ஓ.,பல்கீஸ்பானு புகாரின்படி, திருக்கோஷ்டியூர் எஸ்.ஐ., சண்முகம் விசாரிக்கிறார்.



மணல் கடத்தல்4 பேர் மீது வழக்கு மானாமதுரை: பூவந்தி அருகே பெத்தானேந்தல் காலனியில் இருந்து லாரியில்மணல் கடத்தியதாக, மணல்மேடு வரதன் உட்பட 2 பேர் மீது பூவந்தி போலீசார் வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். மானாமதுரை அருகே அரசனேந்தலில், வி.ஏ.ஓ., சண்முகபிரியா வாகன சோதனையில், மணல் கடத்திய கீழப்பசலை மாரிமுத்து, மருதப்பன் இருவர் மீது புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.மணல் கடத்தல் லாரி பறிமுதல்டிரைவர் கைதுசெட்டிநாடு: செட்டிநாடு எஸ்.ஐ., பாண்டி தலைமையில் போலீசார் நேமத்தான்பட்டி செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை வெள்ளாறு பகுதியில்இருந்து லாரியில் மணல் கடத்தி வந்ததாக, டிரைவர் தேவகோட்டை முத்துராமன் தெரு ராஜ்கபூரை 45, கைது செய்து, உதவியாளர் காரைக்குடி ஸ்டாலின் அமலதாஸ் மீது வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர்.ஆடுகள் திருட்டுஇருவர் கைது, கார் பறிமுதல்சிவகங்கை: சிவகங்கை காளவாசல்செக்போஸ்டில் இன்ஸ்பெக்டர் மீனபிரியா, எஸ்.ஐ., பாண்டியராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர்வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்கேத்திற்கு இடமளிக்கும்விதத்தில், காரில் வந்த அல்லுார்பனங்காடி சரவணன் 24, காளவாசல்ஆனந்தன் 29, ஆகிய இருவரையும்பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, பூவந்தி பகுதியில் 94 ஆடுகளை திருடியதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் உட்பட 7 பேர் இத்தொடர் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சரவணன், ஆனந்தன் இருவரையும் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X