| எஸ்.ஐ.,யை மிரட்டிய போதை போலீஸ் கைது Dinamalar
எஸ்.ஐ.,யை மிரட்டிய போதை போலீஸ் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2020
00:50

விருதுநகர்:விருதுநகரில் போதையில் கத்தியை காட்டி எஸ்.ஐ., ஜெயக்குமாரை மிரட்டிய மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் மாயக்கண்ணன் 30, கைது செய்யப்பட்டார்.



மதுவுக்கு அடிமையான மாயக்கண்ணன், தகவல் தெரிவிக்காமல் 20 நாட்களுக்கும் அதிகமாக விடுப்பு எடுத்தார். இந்நிலையில் பணியில் இருக்கிறோமா, இல்லையா என அறிய கைலியுடன் போதையில் ஆயுதப்படை அலுவலகத்திற்கு சென்றார்.சக போலீசார், எஸ்.பி.,யிடம் அனுமதி பெற்று வரும்படி அறிவுறுத்தினர். தகராறில் ஈடுபட்ட மாயக்கண்ணன், கத்தியை காட்டி எஸ்.ஐ., ஜெயக்குமாரை மிரட்டினார். சூலக்கரை போலீசார் மாயக்கண்ணனை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X