அதிகரிப்பு: முந்திரியில் தண்டு துளைப்பான் தாக்குதல்...கடலூர் மாவட்ட விவசாயிகள் கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2020
04:18

கடலுார்: முந்திரி மரங்களில் தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதால், கடலுார் மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.



வேளாண்மையில் அன்னிய செலாவணியை ஈட்டுவதில் முக்கிய இடத்தை முந்திரி பிடிக்கிறது. கடலுார் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது.பண்ருட்டி முந்திரி உலகத் தரத்தில் சிறந்ததாகவும், சுவை மிகுந்ததாகவும் இருப்பதால் தேசிய அளவில் முந்திரி உற்பத்தி, விற்பனையில் பண்ருட்டி முக்கிய இடம் வகிக்கிறது.



மாவட்டத்தில் முந்திரித் தொழிலை நம்பி லட்சக் கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.பூச்சித் தாக்குதல்முந்திரியில் பூச்சித் தாக்குதல் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் சவாலாக உள்ளது. தண்டு மற்றும் வேர் துளைப்பான், தேயிலை கொசு, மாவுப்பூச்சி, பூப்பேன், தளிர் பிணைக்கும் புழு, இலை சுருட்டுப்புழு, கம்பளிப்புழு மற்றும் கொட்டை துளைப்பான்களால் 60 சதவீதம் மகசூல் பாதிக்கிறது. தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதல் 15 ஆண்டு முதல் 20 வரையில் உற்பத்தி தரும் மரங்கள், ஏக்கருக்கு 10 சதவீதம் இறந்து விடுகிறது. முந்திரி மரங்களைப் பொருத்தவரை, ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி முதல் வாரத்தில் முந்திரி பூத்துக் குலுங்கும். மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் இறுதி வரை அறுவடை நடைபெறும். தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், மரங்களுக்கு உரம் வைத்தும், முந்திரி தோப்புகளை களைகளை அகற்றி சுத்தம் செய்து தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், குள்ளஞ்சாவடி, சின்னதானம்குப்பம், காட்டுசாகை உள்ளிட்ட பல பகுதிகளில் தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதல் அதிரித்துள்ளது. வேர் வழியாக மரத்தின் அடிப்பாகத்தில் ஊடுறுவும் பூச்சிகள், மரம் பட்டுபோக செய்து விடுகிறது.



தற்போது பூச்சி தாக்குதலால் பிசின் தள்ளியுள்ள மரங்களில், வேளாண் அதிகாரிகள் ஆலோசனைப்படி மருந்து தெளித்து வருகின்றனர். 2011 ஆண்டு தானே புயலில் ஏராளமான மரங்கள் சாய்ந்து பாதிப்பு, அடுத்து வறட்சி உட்பட பல காரணங்களால் முந்திரி விவசாயிகள் தொடர்ந்து பாதித்து வரும் நிலையில், தற்போது தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதல் விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.



ஆலோசனை



தண்டுதுளைப்பான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த கடலுார் வேளாண் துணை இயக்குனர் சுரேஷ்ராஜா கூறுகையில், முந்திரியில் தண்டு மற்றும் வேர் துளைப்பான் பூச்சியின் புழுக்கள் மரத்தின் தண்டு பகுதியை தின்று சேதத்தை ஏற்படுத்தும். எனவே ஆரம்ப நிலையிலேயே சில அறிகுறிகள் தோன்றும்போதே பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.தண்டு துளைப்பால் பூச்சி தாக்குதால் மரத்தின் வேர் பலமிழந்து தண்ணீர் மற்றும் சத்துக்களை உறிஞ்ச முடியாமல் போவதால் இலைகள் உதிர்ந்து மரங்கள் பட்டுவிடும். எனவே, மரத்தில் பிசின் கசிதல், சக்கை வெளியேறுவதைக் கண்டவுடன், ஊடுருவி செயல்படும் "மோனோகுரோட்டோபாஸ்' 20 மிலி., மருந்தை தண்ணீருடன் கலந்து வேர் மூலம் செலுத்த வேண்டும். மேலும், ஒரு மீட்டர் உயரத்திற்கு 5 சதவீத வேப்ப எண்ணை கரைசலைத் தடவ வேண்டும். இதனை ஆண்டிற்கு மூன்று முறை செய்ய வேண்டும். புதர்களை அகற்றி தோப்பை சுத்தமாகப் பராமரிப்பதால் தண்டுத் துளைப்பான்களை தடுக்க முடியும்.



மேலும் பசும் சானம் உரத்தை பயன்படுத்தாமல் காய்ந்த பிறகு பயன்படுத்த வேண்டும். வண்டுகள் மரப்பட்டடைகளில் முட்டையிடுவதை தவிர்க்க 3 சதவீத வேப்ப எண்ணெய் கரைசலை மரங்களில் அடிப்பகுதியில் பூசிவிட வேண்டும்.முந்திரி துளிர்விடும் பருவத்தில் துவங்கி, பூ விட்ட பிறகு, பிஞ்சி விடும் பருவம் என, வேளாண் அதிகாரிகள் ஆலோசனைப்படி, மருந்து தெளித்து பூச்சிகளை அழித்து, முந்திரியில் அதிக மகசூல் பெறலாம் என, தெரிவித்தார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X