விவசாயிகளிடம் 'ஜூம் ஆப்' மூலம் குறைகேட்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2020
04:21

கடலுார்: கடலுார் மாவட்ட விவசாயிகளிடம், சம்பா சாகுபடி குறித்து, 'ஜூம் ஆப்' மூலம் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கடலுார் மாவட்ட சம்பா சாகுபடி குறித்து கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், மாவட்டத்தில் உள்ள 13 வேளாண்மை உதவி இயக்குநர் அலவலகத்தில் விவசாயிகளுடன் ஜூம் ஆப் மூலம், கலெக்டர் சந்திரசேகர சகாமுரி நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:கடலுார் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பரப்பளவு இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் 35 ஆயிரத்து 703 எக்டர் பயிரிடப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட 4,009 எக்டர் அதிகமாகும். இந்த ஆண்டு 69 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்து 43 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. சம்பா பருவ நெல் சாகுபடி 91 ஆயிரத்து 600 எக்டர் பரப்பளவு எதிர்பாக்கப்படுகிறது. நீண்ட கால மற்றும் மத்தியகால நெல் விதைகள் 198 மெட்ரிக் டன் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 50 சதவீதம் மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. உரம் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 904 விவசாயிகள் 97 ஆயிரத்து 517 ஏக்கரில் பதிவு செய்து ரூ. 62 கோடி இழப்பீடாக பெற்றுள்ளனர்.மேலும், கூட்டுப் பண்ணையத்திட்டம், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம், தமிழ்நாடு மானா வாரி நிலையான மேம்பாட்டு வளர்ச்சி திட்டம், நுன்னீர் பாசன திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் போன்ற திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X