| பெற்றோருக்கு பயந்து மாணவன் தற்கொலை? Dinamalar
பெற்றோருக்கு பயந்து மாணவன் தற்கொலை?
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2020
06:42

குன்றத்துார் : குன்றத்துாரில், பெற்றோருக்கு பயந்து, மாணவன் தற்கொலை செய்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



குன்றத்துாரைச் சேர்ந்தவர் வடிவேல்; இவரது மனைவி கவிதா. இருவரும் தனியார் நிறுவன ஊழியர்கள். இவர்களது மகன் பிரைட் ஷாம், 14; ஒன்பதாம் வகுப்பு மாணவன்.நேற்று முன்தினம், கணவன் - மனைவி இருவரும், பணிக்கு சென்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த, பிரைட் ஷாம் அறைக்குள் சென்று, நீண்ட நேரமாகியும், வெளியே வரவில்லை.



அவரது நண்பர்கள் உள்ளே சென்று பார்த்த போது, பிரைட் ஷாம், துாக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில், பிரைட் ஷாமை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்த தகவலை தெரிவித்தனர். இது குறித்து, குன்றத்துார் போலீசார் விசாரித்தனர்.



இதில், வீட்டில் இருந்த, 'டிவி'யை பிரைட் ஷாம், கிருமி நாசினியால் துடைத்துள்ளார். அதில், 'டிவி' பழுதடைந்துள்ளது. 'டிவி' பழுதானது தெரிந்தால், பெற்றோர் திட்டுவர் என்ற அச்சத்தில், பிரைட் ஷாம் துாக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடும் வயிற்று வலி காரணமாக, மகன் துாக்கிட்டு தற்கொலை செய்ததாக, அவரது பெற்றோர் தெரிவித்துள்ளதாக, போலீசார் கூறுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X