சென்னை : நன்னடத்தை உறுதி மொழி பத்திரத்தை மீறி, குற்றச்செயலில் ஈடுபட்டவர், 331 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை, கீழ்க்கட்டளை, எம்.கே.நகர், வேலுச்சாமி தெருவைச் சேர்ந்தவர் திலீப், 26. மடிப்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது, கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.குண்டர் தடுப்பு சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டவர், ஜூலையில், துணை கமிஷனர் பிரபாகர் முன்னிலையில் ஆஜரானார்.
'தான் திருந்தி வாழ்வதாகவும், ஓராண்டிற்கு குற்றச் செயலில் ஈடுபட மாட்டேன்' எனவும், சாட்சிகள் முன்னிலையில், நன்னடத்தை உறுதி மொழி பத்திரம் எழுதிக் கொடுத்தார்.ஆனால், 3ம் தேதி, பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில், மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டு கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டார்.
நன்னடத்தை விதிமீறியதால், அவரை, 331 நாட்கள் ஜாமினில் வரமுடியாதபடி, சிறையில் அடைக்க, துணை கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து, திலீப் சிறையில் அடைக்கப்பட்டார்.