பயணிகள் பாதி வழியில் 'டிராப்' :அரசு பஸ் ஊழியர்கள் அலட்சியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2020
22:15

வால்பாறை:வால்பாறை அருகே, அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டனர்.வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. குறிப்பாக, எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் படுமோசமாக உள்ளன.இந்நிலையில், வால்பாறை நகரில் இருந்து குரங்குமுடி எஸ்டேட் பகுதிக்கு நேற்று காலை, 8:30 மணிக்கு (டிஎன் 0506) பஸ் இயக்கப்பட்டது. முருகன் எஸ்டேட் பிரிவு அருகே சென்ற போது, பஸ் முன்பகுதியில், 'பேன் பெல்ட்' கழன்று விட்டதாக கூறி, பயணம் செய்த இரு பெண்களை நடு வழித்தடத்தில் இறக்கி விட்டு, பஸ் வால்பாறையை நோக்கி சென்றது.பயணிகள் கூறுகையில், 'வால்பாறையில் அரசு பஸ்கள் மட்டுமே இயங்குகின்றன. பஸ்சில் பழுது என்று கூறி பாதி வழியில் இறக்கி விட்டதால், குரங்குமுடி எஸ்டேட் பகுதிக்கு நடந்து செல்லும் போது யானைகள் கூட்டம் நின்றது.இதனையடுத்து, குறுக்கு வழித்தடத்தில் குரங்குமுடிக்கு சென்றோம். அரசு பஸ் டிரைவர் பாதியில் இறக்கி விட்டதால், உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, ''பயணிகளை பாதியில் இறக்கி விட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டக்டரிடம் இது குறித்து விளக்கம் கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X