| அன்னுார் கடைகளுக்கு பேரூராட்சி எச்சரிக்கை Dinamalar
அன்னுார் கடைகளுக்கு பேரூராட்சி எச்சரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2020
22:50

அன்னூர்:அன்னூர் பேரூராட்சி, கிராமப்புறம் சார்ந்து இருப்பதால், இரவு 9:30 மணி வரை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது. அன்னூர் பகுதியில் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால், இரவு 8:00 மணிக்குள், அனைத்து கடைகளையும் மூட வேண்டும், என, பேரூராட்சி அறிவித்துள்ளது.இது குறித்து பேரூராட்சி வாகனத்தில், ஒலிபெருக்கியில், வீதி வீதியாக தெரிவிக்கப்பட்ட அறிவிப்பில், 'மருந்துக்கடைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும், இரவு 8:00 மணிக்குள், மூடப்பட வேண்டும். அதற்கு மேல் திறந்து இருக்கும் கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை தவிர, மாஸ்க் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். 'சமூக இடைவெளி பின்பற்றப்படாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, செயல் அலுவலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X