| ஆறு மாதத்தில் மூன்று லட்சம் 'மாஸ்க்': கைதிகள் மூலம் சிறைத்துறை தயாரிப்பு Dinamalar
ஆறு மாதத்தில் மூன்று லட்சம் 'மாஸ்க்': கைதிகள் மூலம் சிறைத்துறை தயாரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2020
22:51

கோவை:ஆறு மாதங்களில் கைதிகள் மூலம் மூன்று லட்சம் முகக்கவசங்களை தயாரித்து, பல்வேறு அமைப்புகளுக்கும், சிறைத்துறை வழங்கியுள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க, முகக்கவசம் முக்கியம். பல்வேறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தனியார் அமைப்புகள் மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.கோவை மத்திய சிறைக்கைதிகள் மூலம், மாஸ்க் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. துவக்கத்தில் போலீசாரின் பயன்பாட்டுக்கு தயாரிக்கப்பட்ட மாஸ்க்குகள், அதன் பின் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கூறுகையில், ''சிறையில் இருந்த, 10 கைதிகள் வாயிலாக, மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டன. இதுவரை, மூன்று லட்சம் மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு, அதில், 2.10 லட்சம் மாஸ்க்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்களின் தேவைக்கேற்ப, மாஸ்க் தயாரிப்பு தொடர்ந்து நடக்கும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X