விழுந்து கிடக்கும் ஓட்டல் 'பார்'கள்: உற்சாகத்தில் மிதக்கும் 'தாபா'க்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2020
22:54

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை நகரில்தான், அதிகபட்சமாக 70க்கும் மேற்பட்ட எப்.எல்.2 உரிமம் பெற்றுள்ள ஓட்டல் பார்கள் உள்ளன. இந்த 'பார்'களால் ஆண்டுக்கு இரண்டரை கோடி ரூபாய் கலால் கட்டணம், ஜி.எஸ்.டி.,யாக ஏழு கோடி ரூபாய் மற்றும் வருமான வரி என 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, மத்திய, மாநில அரசுகளுக்கு வரியாக செலுத்தப்படுகிறது.இந்த தொழிலுக்கு, கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கோவை நகருக்குள்ளும் நகரை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகளிலும், இயங்கி வரும் தாபாக்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்கள், அனுமதியற்ற 'பார்'களாக மாறியிருப்பதுதான் இதற்குக் காரணம். ஊரடங்கின்போது முடங்கியிருந்த இந்த தாபாக்கள், மீண்டும் அசுர கதியில் இயங்கி வருகின்றன.ஓட்டல் மற்றும் டாஸ்மாக் 'பார்'களில், தமிழக அரசு விற்கும் மது வகைகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த தாபாக்களில் டாஸ்மாக் சரக்குகளுடன், கேரளா மற்றும் கர்நாடகா மது வகைகள், மிலிட்டரி சரக்கு என்ற பெயரில், போலி மது வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் ஸ்பெஷல் வாடிக்கையாளர்களுக்கு மான்கறி, காட்டுப்பன்றிக்கறி விருந்தும் பரிமாறப்படுகிறது.இந்த தாபாக்களில் தனித்தனி குடில்கள் போன்ற இடம் தரப்படுவதால், பாலியல் அத்துமீறல்களும் நடப்பதாக புகார்கள் கூறப்படுகின்றன. கோவை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இப்படி, 30 தாபாக்கள் செயல்படுவதாக, ஓட்டல் உரிமையாளர்கள் பட்டியல் காண்பிக்கின்றனர்.அப்புறம்... மாமூல் இல்லாமலா!மாநகர காவல் எல்லைக்குள் அமைந்துள்ள பீளமேடு போலீஸ் லிமிட் தவிர, கோவில்பாளையம், சூலுார், கருமத்தம்பட்டி, செட்டிபாளையம் என ரூரல் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்தான், இந்த மது விற்பனை கனஜோராக நடக்கிறது.மாலை நேரங்களிலும், சனி, ஞாயிறுகளில் பகல் நேரங்களிலும் இந்த தாபாக்கள் முன்பாக, நுாற்றுக்கணக்கான கார்கள் நிற்பதைப் பார்க்க முடிகிறது.மது விற்பனை நடக்கும் ஒவ்வொரு தாபாவிலிருந்தும், அந்தந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு தலா ரூ.75 ஆயிரம் மாதாந்திர மாமூல் போவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இவற்றைத் தவிர, இந்த தாபாக்களால் அரசுகளுக்கு, எந்த வரி வருவாயும் கிடைப்பதில்லை. அதேநேரத்தில் முறையாக வரி செலுத்தும் ஓட்டல் 'பார்'கள் காற்றாடுகின்றன.புகார் அளிக்க முடிவுஇது தொடர்பாக சமீபத்தில், கோவை ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் நடத்திய கூட்டத்தில், சட்டவிரோத செயல்களின் கூடாரமாக விளங்கும் தாபாக்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர், அமைச்சர், கலெக்டர், எஸ்.பி., போலீஸ் கமிஷனர், ஜி.எஸ்.டி., கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், புகார் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, கோவை ரூரல் எஸ்.பி., அருளரசுவிடம் கேட்டதற்கு, ''உடனடியாக சம்மந்தப்பட்ட டி.எஸ்.பி.,க்களுக்கு அறிவுறுத்தி, தாபாக்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் ரெய்டு நடத்தச் சொல்கிறேன். கொரோனா சிகிச்சை முடிந்த பின்பு, மீண்டும் பணிக்கு வந்ததும், நானே நேரடியாக திடீர் ஆய்வு செய்து, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்றார்.நடவடிக்கை விரைவாக எடுக்க வேண்டும்; அது வெறும் கண்துடைப்பாக இருக்கக்கூடாது!
-நமது நிருபர்-

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X