மறு பிரேத பரிசோதனை கோரி வழக்கு | மதுரை செய்திகள் | Dinamalar
மறு பிரேத பரிசோதனை கோரி வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2020
03:40

மதுரை:போலீஸ் விசாரணைக்குச் சென்றவர் தற்கொலை செய்த வழக்கில், மறு பிரேத பரிசோதனை கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு தொடரப்பட்டது



மதுரை மாவட்டம், பேரையூர் அருகே, அணைக்கரைப்பட்டி சந்தோஷ் தாக்கல் செய்த மனு:என் சகோதரர் இதயக்கனி, ஒரு பெண்ணை திருமணம் செய்தார். பெண்ணின் குடும்பத்தினர், சாப்டூர் போலீசில் புகார் செய்தனர். எஸ்.ஐ., ஜெயக்கண்ணன் மற்றும் சில போலீசார், எங்கள் குடும்பத்தினரை, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தினர்.



விசாரணைக்குச் சென்ற சகோதரர் ரமேஷ் செப்., 17ல், வீட்டின் அருகே, மரத்தில் துாக்கில் பிணமாக தொங்கினார்.போலீசார் துன்புறுத்தலால்,ரமேஷ் இறந்துள்ளதாக சந்தேகிக்கிறோம். அவர் தற்கொலை செய்ததாகக் கூறி, போலீசார் தப்பிக்க முயற்சிக்கின்றனர்.



சம்பவத்தை தொடர்ந்து, எஸ்.ஐ.,க்கள் ஜெயக்கண்ணன், பரமசிவம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில், அவசர கதியில் பிரேத பரிசோதனை நடந்தது. விதிகளை பின்பற்றவில்லை. மதுரை அரசு மருத்துவமனையில், மறு பிரேத பரிசோதனை மற்றும் அதை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, சந்தோஷ் மனு செய்தார்.நீதிபதி ஆர்.பொங்கியப்பன், மதுரை கலெக்டர், எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்., 30க்கு ஒத்தி வைத்தார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X