மதுரை : "வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு கொரோனா பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டும்," என மதுரையில் தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர் நல மாநில ஒருங்கிணைப்பாளர் கிளாரா வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது: மாநிலத்தில் 20 லட்சம் வீட்டுவேலை தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 1.5 லட்சம் பேர் நல வாரியங்களில் பதிந்துள்ளனர். முறையாக பதிவு செய்யவில்லை எனக் கூறி அரசு வழங்கிய ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் 40 சதவீதம் பேருக்கு கிடைக்கவில்லை. ஆன்லைன் பதிவுகளை கர்நாடகம் போல் அமைப்புகள் மூலம் பதிவு செய்யும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும்.
மத்திய அரசு சட்டத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ரூ.37ஆக உள்ளது. இதை ரூ.60 ஆக உயர்ந்த வேண்டும். வீட்டு வேலை தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ஐ.எல்.ஓ.,) ஒப்பந்தத்தை மீறாமல் மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார்.