கொரோனா வெறியாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2020
23:58

மதுரை மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு மார்ச் இறுதியில் ஏற்பட்டது. அம்மாதமே ஒருவர் பலியானார். தமிழகம் கண்ட முதல் கொரோனா மரணம் இதுதான். அதன் பிறகு தொற்று பரவத் துவங்கியது. முழு ஊரடங்கு விலக்கிக் கொண்ட பிறகு தீவிரமடைந்தது. ஜூன் இறுதியில் உச்சம் நோக்கி நகர்ந்தது.ஜூலை முழுவதும் அசுர வேட்டை நடத்தியது.92.8 சதவீதம் பேர் மீண்டனர்இதுவரை 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை பாதிப்பு மட்டும் 8452 ஆகும். அம்மாதத்தில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 460ஐ தொட்டது. சராசரியாக தினமும் 272 பேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகினர். இருப்பினும் பிற மாவட்டங்களை போல உச்சக்கட்ட பாதிப்பு நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஆகஸ்ட் பகுதியிலேயே இறங்குமுகம் கண்டது. இப்போதும் குறைந்து தினமும் 70 முதல் 100 பேர் வரை பட்டியலில் இடம் பிடிக்கின்றனர்.சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 800க்கும் கீழ் வந்துவிட்டது. மதுரையில் கடைசி 20 நாள் சராசரி பாதிப்பு 86 ஆக குறைந்திருப்பது ஆறுதல். பாதிப்பின் தீவிரம் மூன்றில் ஒரு பங்காகிவிட்டது. செப்.,23 காலை நிலவரப்படி மொத்த பாதிப்பு 16,024, டிஸ்சார்ஜ் 14,885, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 759 ஆகும். 92.8 சதவீதம் பேர் மீண்டு விட்டனர். வேறு சில மாவட்டங்களிலும் இப்படி தொற்று கட்டுப்பட்டிருக்கலாம். ஆனால் மதுரைக்கு இது சாதாரண விஷயமல்ல.டாப்-5 மாவட்டங்கள்ஏனென்றால் ஒரு கட்டத்தில் தினசரி பாதிப்பில் சென்னைக்கு அடுத்த நிலையில் மதுரை இருந்தது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடுத்த இடங்களில் இருந்தன. இவை தான் டாப்-5 மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டன. ஒரு மாதத்தில் இப்பட்டியலில் இருந்து மதுரை வெளியேறியது. இதர 4 மாவட்டங்கள் இன்றும் அதே நிலையில் நீடிக்கின்றன. மதுரைக்கு பதிலாக கோவை டாப்-5 பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறது. இப்போது மொத்த பாதிப்பில் மதுரை 8 வது இடத்தில் உள்ளது. தினசரி பாதிப்பு விகிதத்தை பார்க்கும் போது முதல் 20 இடத்தில் மதுரை கிடையாது. அந்த அளவிற்கு பாதிப்பு குறைந்திருக்கிறது.பொதுவாக மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகள் தான் கொரோனாவிற்கு பிடித்தமானவை. அங்கு தான் மின்னல் வேகத்தில் பரவல் இருக்கிறது. எனவே தான் இன்றளவும் கிராமப் புறங்கள் பாதுகாப்பாக உள்ளன. மாநிலத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் தான் (2011 கணக்கெடுப்பு படி) மக்கள் தொகை 10 லட்சத்திற்கும் அதிகம். மதுரையில் மாநகராட்சி கணக்கீடு படி இப்போது 18 லட்சம் பேர் வசிக்கின்றனர்.எப்படி சாத்தியமானது...இம்மூன்றில் சென்னைக்கு அடுத்தப்படியாக மக்கள் அடர்த்தி அதிகமுள்ள மாநகராட்சி மதுரை. கோவையை காட்டிலும் ஒரு மடங்கு கூடுதல் நெரிசல் மிகுந்தது. இருப்பினும் கோவையை விட மதுரையில் பாதித்தோர் எண்ணிக்கை குறைவு. மக்கள் அடர்த்தி அடிப்படையில் பார்த்தால் சென்னைக்கு அடுத்த இடத்தில் மதுரை நீடித்திருக்க வேண்டும். ஆனால் குறைவான மக்கள் அடர்த்தியுள்ள நகரங்களை காட்டிலும் மதுரையில் தொற்றின் வேகம் குறைந்துள்ளது.கொரோனா உச்சத்தில் நீடிப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகள் நிரம்ப இருந்தும், பாதுகாப்பான நிலையை மதுரை மாவட்டம் அடைந்தது எப்படி... மதுரையில் அப்படி என்னதான் செய்தார்கள்... பார்க்கலாம்.* ஜூன் மாதம் கொரோனா உச்சம் நோக்கி நகர்ந்தது. உடனடியாக பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தினர். 400-1000 ஆக இருந்த பரிசோதனை 3000-5000 ஆக அதிகரிக்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையின் தினசரி பரிசோதனை திறன் 1200ல் இருந்து 5500 ஆக உயர்த்தப்பட்டது. பரிசோதனையை உயர்த்தினால் தினசரி பாதிப்பு அதிகரிக்குமே என்ற அச்சத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்கள் தயங்கின. மதுரையில் துணிச்சலுடன் பரிசோதனையை உயர்த்தினர். இது துவக்கத்திலேயே நோயாளிகளை கண்டுபிடிக்க உதவியது.* காய்ச்சல் பாதித்தோரை கண்டுபிடிக்க முக்கியத்துவம் தரப்பட்டது. நகரில் 150, புறநகரில் 100 என தினமும் 250 முகாம்கள் நடந்தன. மாநகராட்சியில் மட்டும் இதுவரை 10,677 முகாம்கள் நடந்துள்ளன. 5,24,881 பேர் பங்கேற்றுள்ளனர். 98,138 பேருக்கு அறிகுறி இருந்தது. பரிசோதனையில் 4047 பேருக்கு தொற்று உறுதியானது. இன்னும் முகாம்கள் தொடர்கின்றன.* நோயாளிகளை கண்டுபிடித்ததும், வைரஸ் தாக்கத்தின் தீவிரத்தை அறிய 3 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. எக்ஸ்ரே, இதர பரிசோதனைகள் மூலம் பாதிப்பு அளவை டாக்டர்கள் கண்டுபிடித்து, தீவிர பாதிப்புள்ளோர் மதுரை அரசு கொரோனா மருத்துவமனைக்கும், மிதமான தாக்குதலுக்கு ஆளானவர்கள் தோப்பூர் மருத்துவமனைக்கும், லேசான பாதிப்பு என்றால் கொரோனா கேர் சென்டர், வீட்டுத் தனிமைக்கும் பரிந்துரைக்கப்பட்டனர். இன்னும் இரு மையங்கள் செயல்படுகின்றன.* பெருமளவு வெற்றி நோய் எதிர்ப்பு மருந்துகள் மூலம் கிடைத்திருக்கிறது. கொரோனா பரவல் துவங்கியதுமே நகர், புறநகரில் விட்டமின் சி, ஜிங், ஆர்சனிக் ஆல்பம் போன்ற மாத்திரைகள், கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டன. அதிலும் மாநகராட்சியில் கபசுர குடிநீர் எடுத்துக்கொள்ளாதோரை கண்டுபிடிப்பதே கடினம். நகரில் இருகட்டமாக 3 லட்சம் பேருக்கு ஜிங், விட்டமின் சி மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. பல லட்சம் லிட்டர் கபசுர குடிநீர் வினியோகித்துள்ளனர். இன்னும் தினசரி 4 ஆயிரம் லிட்டர் வினியோகிக்கின்றனர். தலா 50 கிராம் எடையுள்ள கபசுர குடிநீர் பாக்கெட்கள் 1.48 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்துக்கு தேவையான எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டக விநியோகமும் நடந்தது. நகரில் மட்டும் 61 ஆயிரம் பெட்டகங்கள் காலியாகியுள்ளன. நோய் எதிர்ப்பு மருந்து வினியோகத்தில் பிற மாவட்டங்களை விட மதுரை ஒரு படி மேலே உள்ளது. இதற்கு கை மேல் பலனும் கிடைத்துள்ளது. கொரோனா உச்சத்தில் நீடிக்கும் மாவட்டங்கள் 'மதுரை மாடல்' தடுப்பு நடவடிக்கையை பின்பற்றலாமே.- -த.தினேஷ்இதை கவனித்தீர்களா...சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் ஏப்ரல் முதல் இதுவரை மாதந்தோறும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடைசி 20 நாள் சராசரி, சிகிச்சை பெறுவோர், டிஸ்சார்ஜ் விகிதம் பட்டியலில் தரப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X