மதுரையில் பாடுவது எனக்கு பெருமை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
00:28

எஸ்.பி.பி., ஒரு சங்கீத மேகம்நித்யஸ்ரீ, பாடகி, சென்னைகனடாவில் எஸ்.பி.பி., உடன் 'வளையோசை கலகலவென' பாடல் பாடினேன்.அப்போது அவர் 'இந்த பாடல் உங்க அம்மா உன் வயதில் இருக்கும் போது வந்தது, அந்த பாட்டை இன்று உன்னுடன் பாட எனக்கு கடவுள் சக்தி கொடுத்துள்ளார், கண்டிப்பாக உன் குழந்தையுடனும் இணைந்து பாடுவேன்' என நெகிழ்ச்சியாக கூறினார். கடந்தாண்டு அவருடன் 'புது மாப்பிள்ளைக்கு' பாடல் பாடிய போது ஞாபகம் வைத்து பேசினார். வீட்டில் அவரை சந்தித்த போது இசை அறிவுரை கூறினார். அவர் மீண்டு வர வேண்டி என் யு டியூப் தளத்தில் 'சங்கீத மேகம்' பாடல் பாடினேன். இந்த சங்கீத மேகத்தின் மறைவை துளியும் எதிர்பார்க்கவில்லை.தேகம் மறைந்தாலும் இசையாய் வாழ்பவர்சிவராமகிருஷ்ணன், தனியார் நிறுவன ஊழியர், மதுரைஒவ்வொரு முறையும் எஸ்.பி.பி., மதுரை வரும்போது அவர் கூடவேஇருந்திருக்கிறேன். சில சமயங்களில் அவரிடம்பாடல்கள் குறித்து பேசி இருக்கிறேன்.அச்சமயத்தில் நம் கருத்துக்கு மதிப்பளித்து பொறுமையாக விளக்கம் அளிப்பார். அவர்மேடையில் ஒவ்வொரு முறையும் பாடும்போது அதற்கு தயாராகி புதுப்பாடகராகதான் வருவார். ஜூனியர் பாடகர்கள், புதுப்பாடகர்கள் பாடினால் அவர்கள் போக்கில் சென்று பாடி ஊக்குவிப்பார். இந்த பண்பை அவரிடம் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். 'மதுரை மேடைகளில் நான் பாட காரணம் என் பால்ய நண்பர் ஸ்ரீதர்' என்று ஒவ்வொரு முறையும் அவர் கூற மறக்கமாட்டார்.அந்த நண்பரை சென்னை ஸ்டூடியோவில் சந்தித்ததாக கூறுவார். மதுரையில் பாடுவதை பெருமையாக கருதுகிறேன் என்பார். மனிதநேயம் மிக்கவர். யாரையும் காயப்படுத்த மாட்டார். சரியாக பாடவில்லை என்று தோன்றினால் மன்னிப்பு கேட்கக்கூட தயங்காதவர். கர்வம் இல்லாத மனிதர். தேகம் மறைந்தாலும் இசையாய் வாழ்வேன் என்று ஒரு பாடலில் பாடியிருப்பார். அது உண்மை தான்.நமக்கு கிடைத்த பொக்கிஷம்சந்தானபாண்டியன், போலீஸ்காரர், மதுரைஎஸ்.பி.பி., மதுரை வரும்போதெல்லாம் எப்படியாவது சந்தித்து விடுவேன். சிலமாதங்களுக்கு முன் காந்தி மியூசியத்தில் நடந்த இசைநிகழ்ச்சியில்தான் கடைசியாக அவரை சந்தித்தது. அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று பார்த்து பேசினேன்.அருகில்உட்காருமாறு கூறினார். நான் தயங்கினேன். அவரே கையை பிடித்து உட்கார வைத்தார்.'நீங்கள் எங்களுக்கும், தமிழுக்கும் கிடைத்த பொக்கிஷம். மதுரையில் பிறந்த டி.எம்.எஸ்.,க்கு அடுத்து தமிழ் சொற்களை அச்சு பிறழாமல் பாடுவது நீங்கள்தான்'என்றேன். அதற்கு சிரித்தவர், 'அவர் தாய்மொழி சவுராஷ்டிரா. என் தாய்மொழிதெலுங்கு' என தன்னடக்கத்துடன் கூறினார். 'நீங்கள் எந்த ெமாழியில் பாடினாலும்அந்தந்த ஹீரோக்கள் பாடுவது போல் எங்களுக்கு தோன்றுகிறதே' என கேட்டேன். 'அது இறைவன் கொடுத்த வரம்'என்றார்.ஓவியர்களின் வழித்துணை எஸ்.பி.பி.,ஸ்வர்ணலதா, ஓவியர், சென்னைஎங்களைப் போன்ற ஓவியர்களின் வழித்துணை அவரது குரல் தான். இந்த பாட்டு தான் நல்லா இருக்கும் என்று, அவரது பிற பாடல்களை ஒதுக்கி விட முடியாது. ஆனால் சந்தோஷத்தின் போதும், துக்கத்தின் போதும் உற்சாகமாக நினைக்கும் போதும் சிகரம் படத்தில் வரும் 'உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன்….உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன்' என்ற பாடல் கேட்பேன். எந்த வயதினரும் கேட்டு ரசித்து மெய் மறக்கும் பாடல் இது. இந்த ஜென்மத்துக்கு அந்த குரல் மட்டும் போதும்.12 வயது முதல் ரசிகன்என். நாகரத்தினம்,பேராசிரியர் , தேனி.12 வயது முதல் எஸ்.பி.பி.,யின் தீவிர ரசிகன் நான். அவரது பாடல்களை கேட்காத நாட்களே கிடையாது. குடும்பத்துடன் கேட்டு மகிழ்வோம். அவரது பாடல்கள் அடங்கிய கேசட், 'சிடி', 'டிவிடி', பென்டிரைவ் என அனைத்தையும் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் ரோஜா படத்தில் மூன்று பாடல்களை பாடி ரகுமான் வளர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டவர். ரஜினி, கமல், தெலுங்கில் விஷ்ணுவர்த்தன் போன்ற ஹீரோக்களுக்கு பின்னணி குரல் தரும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்துள்ளார். கேளடி கண்மணி, அமர்க்களம் படங்களில் மெல்லிசை பாடல்களை மூன்று நிமிடம் மூச்சு விடாமல் பாடி ரசிகர்களை வியக்க வைத்த அற்புத மனிதர்.எஸ்.பி.பி.க்கு பிடித்த லட்டுகுமார், ஓட்டல் உரிமையாளர், மதுரைஇந்தாண்டு ஜனவரி 18 ம் தேதி மதுரையில் நடந்த இசைக்கச்சேரியில் கடைசியாக எஸ்.பி.பி. பாடினார். அவருக்கு மேடையில் சால்வை அணிவித்தேன். எஸ்.பி.பி.க்கு மோதி லட்டு மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்து, எங்கள் ஓட்டலில் ஸ்பெஷலாக தயாரித்து பாக்சில் கொடுத்தேன். என்ன என்று மேடையில் கேட்டபோது மோதி லட்டு என்றேன். சிரித்தபடியே விசாரிச்சிருக்கீங்க போல… ரொம்ப சந்தோஷம் என்று வாங்கினார்.அவரது பாட்டிற்கு நான் அடிமைஆர்,உதயா, இசைக்கலைஞர், ராமநாதபுரம்இசை உலகின் பிரமாண்டமே சாய்ந்தது. என்னில் கலந்த இசைக்கு உயிர் கொடுத்தவர் எஸ்.பி.பி., தான். அவர் போன்றவரை இனியொரு தலைமுறை காண்பதும் அரிது. எனது சிறுவயது முதல் அவரது பாட்டிற்கு நான் அடிமை. அவரது பாடல்களை கேட்டு அதனால் ஏற்பட்ட உந்துதலால் தான் அவர் காட்டிய வழியில் எனது இசைப்பயணத்தை தொடர்கிறேன்.சிப்பி இருக்குது.. முத்தும் இருக்குது... என்ற பாடலும், கேளடி கண்மணி பாடல், மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ... போன்ற பாடல்களை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.அவரது இயல்பான, மென்மையான குரல்வளம், இனிமையான பண்பு எப்போதும் பிடிக்கும். அவர் பாடும் போது இசையே அவருக்கு வளைந்து கொடுக்கும் அளவிற்கு நெளிவு சுளிவு, அனைத்து முக பாவனைகளையும், உணர்ச்சிகளையும் தனது பாடலில் வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்.நான் பாடும் பாடல்ஏ.அனந்தராமன், வங்கி அதிகாரி (ஓய்வு)சிவகங்கைநான் 30 ஆண்டாக இசை கச்சேரிகளில், டி.எம்.எஸ்., மற்றும் எஸ்.பி.பி.,பாடல் விரும்பி பாடுவேன். அதில் எஸ்.பி.பி., பாடிய ''இறைவன் என்றொரு கவிஞன், அவன் படைத்த கவிதை மனிதன். அதில் அறிஞனும், மூடனும் உண்டு. ஆனால், தொடக்கமும் முடிவும் ஒன்று'', என்ற பாடலை நான் அடிக்கடி பாடுவது உண்டு. மதுரையில் நடந்த இசை கச்சேரிக்கு வந்த அவரிடம் பேசியது உண்டு. அவர் நல்ல மனிதர். அனைவரிடமும் பணிவாக நடந்து கொள்ளும் எளிமையானவர். ஜாதி, மதத்தை கடந்து இசைத்துறையில் அனைவரும் நேசிக்கும் படி வளர்ந்தவர். பல மொழி பாடல்கள் மூலம் உலக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். இசைக்கு மொழி இல்லை. அனைத்து மொழியிலும் பாடி இசை ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த இசை மேதை.ஆடியோ கேசட் விற்பனை அமோகம்துளசிராம், உரிமையாளர், கீஷ்டு கானம், மதுரை.மதுரையில் 1988ல் எங்கள் நிறுவனம் ஆரம்பித்த வேளையில் எஸ்.பி.பி., மிகவும் பிரபலமாக இருந்தார். இசையமைப்பாளர்கள் கூறுவதை உள்வாங்கி திரையில் பாடும் நடிகரின் குரலுக்கு ஏற்ப பாடுவார். இவரது ஆடியோ கேசட் தனியாக வந்த போது விற்பனை கொடி கட்டி பறந்தது. நம்பர் ஒன், நம்பர் டூ, திரீ இடங்களில் தன்னை தக்க வைத்தார், அவர் பாடி ரசிகர்கள் விரும்பிய பாடல்கள் நிரம்பிய லாங் பிளே ரெக்கார்டு, கேசட், சி.டி.,க்களை மதுரையில் அதிகம் விற்றது நாங்கள் தான். ரத்தத்தில் கலந்த அவரது மறைவை தாங்க முடியவில்லை.பசுமையான நினைவுகள்ராஜ்குமார், இசைக்குழு, சிவகாசி. தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நான் சிவகாசியில் எவரெஸ்ட் இசைக்குழுவை 1979 ல் துவக்கி இன்று வரை நடத்தி வருகிறேன். சிவகாசி தனியார் பள்ளிக்கு கட்டடம் கட்ட நிதி தேவைப்பட்டது. இசையமைப்பாளர் கங்கை அமரனை அழைத்து இசைக்கச்சேரி நடத்தினோம். கங்கைஅமரன் குழுவில் எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். நாள் முழுவதும் எஸ்.பி.பி.,யுடன் இருந்தேன். என்னை ராஜா என அன்பாக அழைப்பார். 2016 ல் இஸ்ரேல் சென்று விட்டு சென்னை விமான நிலையத்திலிருந்து வந்தபோது எஸ்.பி.பி.,யை சந்தித்தேன். அவரை பார்த்த சந்தோஷத்தில் காலை தொட்டு வணங்கினேன். சிவகாசி ராஜா நல்லா இருக்கீங்களா... பார்த்து ரொம்ப நாளாச்சு... வீட்டில் அனைவரும் நலமா என என்னை சரியாக அடையாளம் கண்டு நலம் விசாரித்த தருணங்கள் இன்றளவும் பசுமையாக நிழலாடுகிறது.நமது நிருபர் குழு'சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் துாவும் காலம்... போகும் பாதை துாரமே வாழும் காலம் கொஞ்சமே... இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்'... என நம்மை எல்லாம் மீளா துயரில் ஆழ்த்திவிட்டு சென்ற இசையின் கடவுள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து பேசினால் இந்த யுகம் போதாது. அவர் மறையவில்லை; இசைக்குள் கருவாகி மீண்டும் மலர்ந்து இசை மணம் பரப்புவார் என்ற நம்பிக்கையுடன் அவரது நினைவலைகளில் நீந்தும் ரசிகர்கள் மனம் திறக்கிறார்கள்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X