எதுக்கும் ஒரு நேரம் காலம் வேண்டாமா! மாநகராட்சியின் நோட்டீசால் மக்கள் கோபம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

26 செப்
2020
05:41
பதிவு செய்த நாள்
செப் 26,2020 00:48

கோவை:ஊரடங்கு காரணமாக, பொருளாதார இழப்பை சந்தித்து, வாழ்வாதாரத்துக்கே, கோவை மக்கள் போராடி வரும் இச்சூழலில், வீட்டில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை என கூறி, நோட்டீஸ் வழங்கி, ஸ்டிக்கர் ஒட்டும் பணியை செய்து வருகிறது, மாநகராட்சி நிர்வாகம்.


ஊரடங்கு அமலில் இருந்ததால், கடந்த சில மாதங்களாக, வாழ்வாதாரத்தை இழந்து, பொதுமக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். ஊரடங்கு தளர்வு செய்தபின், மீண்டும் வேலை கிடைத்து, இப்போதுதான் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர்.இருப்பினும், பெரும்பாலான மக்கள், பொருளாதார நெருக்கடியில் இருந்து, இன்னும் முழுமையாக மீளவில்லை.


அதற்குள் இன்னொரு சுமையாக, மாநகராட்சியில் இருந்து வீடு வீடாக வந்து, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறதா என ஆய்வு செய்கின்றனர்.அத்தகைய கட்டமைப்பு இல்லையெனில், நோட்டீஸ் வினியோகித்து, வீட்டுக்கு வெளியே ஸ்டிக்கர் ஒட்டிச் செல்கின்றனர்.கோவை, 84வது வார்டு, கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள வீடுகளில், நேற்று நோட்டீஸ் வினியோகித்து, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.


இது, அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.அப்பகுதி மக்கள் கூறியதாவது:மழை நீரை சேகரிக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம். புதிதாக வீடு கட்டும்போது, அத்தகைய கட்டமைப்பு ஏற்படுத்தச் சொல்வது சரியாக இருக்கும். ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடத்தில், 15 நாட்களுக்குள் செய்தாக வேண்டும்; பழைய கட்டுமானமாக இருப்பின், புதுப்பிக்க வேண்டுமென நெருக்கடி கொடுப்பது, எவ்விதத்தில் நியாயம்?


ஊரடங்கு காரணமாக, வேலைவாய்ப்பு இழந்து, பொருளாதார சிக்கலில் சுழன்று, கடந்த ஒரு மாதமாகத்தான், மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். அது, மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாதா?வீடு வீடாக ஆய்வுக்கு வருவது மட்டுமின்றி, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த தவறினால், நடவடிக்கை எடுக்கப்படும் என, நோட்டீஸ் வழங்குகின்றனர்.ஏற்கனவே, சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.


ஆகவே, நோட்டீஸ் வினியோகிப்பதை நிறுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.'பழைய உத்தரவாக இருக்கலாம்'மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியனிடம் கேட்டபோது, ''ரோடுகளில் மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, கட்டமைப்பு ஏற்படுத்தச் சொல்லியிருக்கிறேன். வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டவோ, நோட்டீஸ் கொடுக்கவோ அறிவுறுத்தவில்லை. பழைய உத்தரவாக இருக்கலாம். அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalaichelvan k.s. - coimbatore,இந்தியா
26-செப்-202022:05:41 IST Report Abuse
kalaichelvan k.s. வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துவதால் குறைந்த அளவு நீரே சேகரிக்க முடியும். ஏரி குளம் எல்லாம் நீரை கொண்டு சென்று நிரப்பினால் மிகுந்த பலன் தரும். நெருக்க மாக வீடுகளை கொண்டுள்ள நகரத்தில் இது ஒரு கடனுக்கு செய்யும் வேலையாக தான் இருக்கும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-செப்-202008:28:43 IST Report Abuse
Bhaskaran தமிழக அதிகாரிகள் உண்மையிலேயே விவரமானவர்கள் புத்திசாலிகள் என்பதை மறுமுறை நிரூபித்திருக்காங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X