கடை வாடகை இரு மாதங்கள் தள்ளுபடி: கணக்கெடுப்புக்குப் பின் முடிவெடுக்கும் மாநகராட்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
00:50

கோவை:ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகள் மற்றும் குத்தகை ஏலம் எடுத்தவர்களிடம், கடந்த ஏப்., மற்றும் மே மாதத்துக்கான தொகை வசூலிக்க வேண்டாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தொற்று பரவல் காரணமாக, மார்ச், 23 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடைகள், பஸ் ஸ்டாண்ட் கடைகள், டூவீலர் ஸ்டாண்டுகள் மூடப்பட்டிருந்தன.பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள கழிப்பறைகள் பயன்பாடின்றி இருந்தன. பொருளாதார இழப்பு ஏற்பட்டதால், வாடகை மற்றும் குத்தகை இனங்களை ரத்து செய்ய வேண்டுமென, தமிழக அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.இதை பரிசீலித்த, தமிழக நகராட்சிகளின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கடந்த ஏப்., மற்றும் மே மாதத்துக்கான தொகை வசூலிப்பதற்கு மட்டும் விலக்கு அளித்து, உத்தரவிட்டுள்ளது.இவ்விஷயத்தில், உள்ளாட்சி அமைப்புகள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், வணிக வளாக கடைகள், வாகனம் நிறுத்துமிடங்கள், வாரச்சந்தை, பஸ் ஸ்டாண்ட் நுழைவு கட்டணம், கட்டண கழிப்பறை மூலம் கிடைக்கும் வருவாயே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கிய நிதி ஆதாரம்.எனவே, ஊரடங்கு சமயத்தில், ஏப்., மற்றும் மே மாதங்களில், எந்தெந்த கடைகள் மூடப்பட்டிருந்தன என்பதை உள்ளாட்சி அமைப்புகள் சரிபார்த்து, விலக்கு அளிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.இதன் அடிப்படையில், பஸ் ஸ்டாண்டுகளில் கடை நடத்துவோருக்கு, ஏப்., முதல் ஆக., வரை ஐந்து மாத வாடகையை, தள்ளுபடி செய்ய வேண்டுமென, கோவை மாநகராட்சி பேருந்து நிலைய வணிக வளாக கடைகள் குத்தகைதாரர்கள் சங்கத்தினர், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியனை நேற்று சந்தித்து முறையிட்டனர்.இதுதொடர்பாக, மண்டலம் வாரியாக கணக்கெடுத்து, பட்டியல் சமர்ப்பிக்க, உதவி வருவாய் அலுவலர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202016:56:06 IST Report Abuse
Ram Pollachi லட்ச கணக்கில் முன்பணம் ஆயிரக் கணக்கில் வாடகையை கொடுத்து வியாபாரம் செய்பவர்களை முட்டாளாக்கும் செயல் இது. அரசியல் பிண்ணனி, பண பலம் உள்ளவர்களுக்கு உங்கள் கடை சாவி கிடைக்கும். டீ கடை, பிரியாணி கடை, பழக்கடை, கார் கடை, மருத்துவ கிளீனிக் நடத்துபவர்கள் ஏழைகளாக? லட்ச கணக்கில் உள் அலங்கார வேலை செய்து பணம் அள்ளும் இவர்களுக்கா பரிவு? உள்ளாட்சி அமைப்பின் சொத்து மாதிரி தெரியவில்லை அவ்வளவு ஆடம்பரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X