| தாய் இறுதி சடங்கிற்கு வந்த மகனை தாக்கிய 4 பேர் கைது.. Dinamalar
தாய் இறுதி சடங்கிற்கு வந்த மகனை தாக்கிய 4 பேர் கைது..
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2020
04:12

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அருகே தாய் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த மகன் மற்றும் பேத்தியை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த என்.மூலக்குப்பம் திரவுபதியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி ராமன். இவரது மனைவி மல்லிகா. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் ஜோதி லட்சுமி,38; என்பவரை மூர்த்தி ராமன் 2ம் திருமணம் செய்தார்.கடந்த 19 ம் தேதி மூர்த்திராமனின் தாய் சின்னம்மாள் இறந்து விட்டார். தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள மூர்த்தி ராமன், ஜோதிலட்சுமி, மகள்கள் கிருஷ்ணபிரியா, கிருஷ்ணவேணி, கிருஷ்ணகுமாரி சென்றனர்.இதனால் ஆத்திரமடைந்த மூர்த்திராமனின் முதல் மனைவியின் மகன் ஜானகிராமன், அவரது உறவினர்கள் அதே பகுதி அமரேசன், இவரது மகன் அமர்நாத் மற்றும் ராமகிருஷ்ணன் சேர்ந்து மூர்த்திராமன் உட்பட 4 பேரையும் தாக்கினர். இதில் 4 பேரும் பலத்த காயமடைந்து மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஜானகிராமன்,29; அமரேசன்,45; அமர்நாத்,18; ராமகிருஷ்ணன்,65; மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X