இடிந்து விழும் நிலையில் அரசு மருத்துவமனை கட்டடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
04:48

திருவெண்ணெய்நல்லுார்; அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் இடிந்து விழும் தருவாயில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.



திருவெண்ணெய்நல்லுார் பஸ் நிறுத்தம் அருகில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து மருத்துவமனை துவங்கப்பட்டது. மருத்துவமனையில் திருவெண்ணெய்நல்லுார் மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொது மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு அதே இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டுவருகிறது. அப்போது அதற்கு அருகாமையில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. தற்போது அக்கட்டடம் விரிசல் ஏற்பட்டு காரைகள் பெயர்ந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளதால் மருத்துவமனைக்கு வருபவர்களும், மருத்துவர்களும் அச்சத்துடன் பணி செய்து வருகின்றனர்.இது மட்டுமின்றி அக்கட்டடத்திற்கு அருகில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் கடந்த ஓராண்டுக்கு முன் இடிந்து விழுந்தது. மேலும் இம்மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக பிரசவ வார்டுகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பிரசவமும் பார்க்கப்பட்டு வருகின்றது. எனவே புதிய கட்டடம் கட்டி சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X