சிக்கல்: திண்டிவனம் பகுதியில் குற்றவாளிகளை பிடிப்பதில்...சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதால் தொடரும் அவலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
04:58

திண்டிவனம்; திண்டிவனம் பகுதியில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் செயல்படாமல் இருப்பதால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில், போலீசார் சிரமப்படுகின்றனர்.



பெரும்பாலான குற்ற சம்பங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிப்பதில், போலீசாருக்கு பெரும் உதவியாக கண் காணிப்பு கேமராக்கள் உள்ளது. குற்றம் நடந்த போது, அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கொண்டு, விபரங்கள் சேகரித்து, போலீசார் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து வருகின்றனர்.இதேபோல், திண்டிவனம் பகுதியில், வியாபாரிகள், தொழில் அதிபர்கள், குடியிருப்போர் நல சங்கம், அரிமா சங்கங்கள் உள்ளிட்டவர்களின் நிதியுதவியுடன் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டது.



இது இல்லாமல் மாவட்ட எஸ்.பி.,ஒத்துழைப்போடு பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டது. கண்காணிப்பு கேமராக்களை மானிட்டர் செய்யும் அமைப்பு, திண்டிவனம் உட்கோட்ட துணை காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ளது. ஆரம்பத்தில் நல்ல நிலையில் செயல்பட்டு வந்த கண்காணிப்பு கேமராக்கள், தற்போது பல இடங்களில் செயல்பாட்டில் இல்லை. இதனால் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, பிடிப்பதில் குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக திண்டிவனத்தில் நடந்த பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் இருப்பதால் பல இடங்களில் தொடர்ந்து கைவரிசையை காட்டி வருகின்றனர். திண்டிவனம் ஜெயபுரம் பகுதியில் கடந்த 14ம் தேதி காஸ் அதிபர் குடியிருந்த வீட்டிற்குள் புகுந்து 2.41 லட்சத்து ரூபாய் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதே போல் அதே பகுதியில் பூட்டியிருந்து வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளைடித்து சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று, கொள்ளையடிக்க வந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் கொள்ளையர்கள் முகத்தை மூடியுள்ளதால் அடையாளம் காணமுடியவில்லை.



கொள்ளை நடந்த இடத்திற்கு வந்த துப்பறியும் நாய், திண்டிவனம் மேம்பாலம் பஸ் நிலையம் வரை ஓடி வந்து நின்றுவிட்டது.கொள்ளையர்கள் அங்கிருந்து வாகனம் மூலம் தப்பித்துசென்றிருக்க்கலாம். மேம்பால பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக பழுதாகிவிட்டதால், கொள்ளையர்களை போலீசாரால் அடையாளம் காணமுடியவில்லை.வழக்கமாக கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் போதுதான் முகமுடி அணிந்திருப்பார்கள். அதன் பிறகு வெளியே வந்த பிறகு, முகமுடியை கழற்றிவிட்டு சாதரணமாக செல்வார்கள்.



திண்டிவனம் நகரத்தில் முக்கியமான இடங்களான பஸ் நிலையம் அமைந்துள்ள மேம்பாலப்பகுதி மற்றும் நேரு வீதி, திண்டிவனம்-புதுச்சேரி ரோடு உள்ளிட்ட பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேராக்கள் செயல்படாமல் உள்ளது.திண்டிவனம் நகரப்பகுதியில் செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சீர் செய்வதற்கு விழுப்புரம் எஸ்.பி.,ராதாகிருஷ்ணன் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X